ராணுவ பலம்: இந்தியா போதிய அக்கறை காட்டவில்லை

Subscribe to Oneindia Tamil

லண்டன்:

தனது ராணவத்தை சீரமைப்பதில் இந்தியா போதிய ஆர்வம் காட்டவில்லை என பிரிட்டனைச் சேர்ந்த பாதுகாப்புஆய்வு அமைப்பு குறை கூறியுள்ளது.

The International Institute for Strategic Studies (IISS) என்ற அந்த அமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வுஅறிக்கையில், இந்தியாவின் பாதுகாப்பு பட்ஜெட் மிகக் குறைந்த அளவிலயே உள்ளது. பல ஆண்டுகளாகபாதுகாப்புத்துறையை இந்தியா புறக்கணித்து வந்தது. பாதுகாப்புப் படைகளின் பல்வேறு பிரிவுகளுக்குள்ளேயேபோட்டியும் பொறாமையும் நிலவுகிறது.

ஆயுத பராமரிப்பும் முறையாக இல்லை, திட்டமிடுதலிலும் தெளிவு இல்லை. இந்திய ராணுவத்துக்கு சிறந்த வீரர்கள்கிடைப்பதிலும், தேர்வு செய்வதிலும் பல சிக்கல்கள் உள்ளன. இந்தியாவிடம் உள்ள பெரும்பாலான ஆயுதங்கள்ரஷ்யாவிடமிருந்து பெறப்பட்டவை. அவை தொழில்நுட்பரீதியில் பின் தங்கியவை.

ஒரே ஒரு ஆறுதல் என்னவென்றால், இதே போன்ற ஆயுதங்களைத் தான் சீனாவுக்கும் ரஷ்யா வழங்கியுள்ளது.

பாகிஸ்தானுடன் ஒப்பிட்டால் இந்தியாவில் ராணுவத்தின் எண்ணிக்கை பல மடங்கு அதிகம். பாகிஸ்தான் தென்மாகாணங்கைள இந்திய ராணுவத்தால் மிக எளிதாகத் தாக்க முடியும்.

இந்திய விமானப் படையை இந்த பிராந்தியத்திலேயே மிகவும் வலுவானது என்பது உண்மை தான். ஆனால்,1990களில், மேற்கத்திய நாடுகள், நேட்டோ நாடுகள் ஆகியவை நடத்திய விமானத் தாக்குதல்களின் தரத்தைபார்க்கும்போது இந்தியாவின் விமானப் படை மிகவும் பின் தங்கியிருப்பது தெரிய வருகிறது. இந்த நாடுகளின்தாக்குதல் திறனுக்கு சமமாக இந்திய விமானப் படையையும் மேம்படுத்த வேண்டுமெனில் விமானிகளுக்கானபயிற்சியின் தரத்தை கூட்ட வேண்டும். ஆயுதங்களை கையாளும் முறையும் மேம்படுத்தப்பட வேண்டும்.

இந்திய கடற்படை கடந்த 10 ஆண்டுகளில் மிகவும் பின்தங்கியது. ஆனால், இப்போது நிலைமை மேம்பட்டுவருகிறது. பிரச்சனையான நேரங்களில் கடற்படையை மிகச் சிறப்பாக பயன்படுத்தும் அளவுக்கு இந்தியகடற்படையில் திறமையான அட்மிரல்கள் இல்லை.

இதில் எல்லாம் பின் தங்கினாலும் அணு ஆயுத பலத்தில் இந்தியா வலுப்பெற்று வருகிறது. அடுத்த 10ஆண்டுகளுக்கு அணு ஆயுத உற்பத்தி, பராமரிப்புக்கு மட்டும் இந்தியாவுக்கு ஆண்டுக்கு 500 பில்லியன் டாலர்கள்தேவைப்படும்.

ஐ.ஏ.என்.எஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+