பொள்ளாச்சி, உடுமலையில் உழவர் சந்தைகள் திறப்பு
Subscribe to Oneindia Tamil
கோவை:
கோவை மாவட்டத்தில் மேலும் மூன்று உழவர் சந்தைகள் வரும் 17ம் தேதிதிறக்கப்படுகின்றன.
இந்த உழவர் சந்தையை வேளாண்மைத் துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் திறந்துவைக்கவுள்ளார்.
கோவையில் செயல்பட்டு வரும் உழவர் சந்தை வெற்றி பெற்றதையடுத்து, அங்குமற்றொரு உழவர் சந்தையும், பொள்ளாச்சி, உடுமலை ஆகிய இடங்களில் தலா ஒருஉழவர் சந்தையும் திறக்கப்படுகிறது.
கோவையில் சிங்காநல்லூரில் ரூ. 12.80 லட்சம் செலவில் 78 கடைகளுடன் இந்தஉழவர் சந்தை திறக்கப்பட்டுள்ளது. பொள்ளாச்சியில் ரூ. 9.5 லட்சம் செலவிலும்,உடுமலைப் பேட்டையில் ரூ. 7.2 லட்சம் செலவிலும் உழவர் சந்தைகள்திறக்கப்படுகின்றன.
இந்த தகவலை மாவட்ட கலெக்டர் சந்தானம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications