பிஜி இந்தியர்களுக்கு உதவ நியுசிலாந்து முன் வருகிறது

Subscribe to Oneindia Tamil

மெல்போர்ன்:

பிஜியில் வாழும் இந்திய வம்சாவளியிரைப் பாதுகாக்க நியுசிலாந்து உதவ வேண்டும் என்று முன்னாள் பிரதமர் மகேந்திர செளத்ரி வேண்டுகோள்விடுத்துள்ளார்.

பிஜியில் இந்திய வம்சாவளி பிரதமர் மகேந்திர செளத்ரி மற்றும் அவரது அமைச்சரவையில் உள்ளவர்களை புரட்சிக்கும்பல் தலைவர் ஜார்ஜ் ஸ்பீடுபாராளுமன்ற வளாகத்தில் கடந்த மே 19 ம் தேதி சிறைவைத்தார்.

இந்திய வம்சாவளியினர் பிஜி தீவில் ஆட்சி செய்யக் கூடாது என்பது உள்பட பல கோரிக்கைகளை முன் வைத்து புரட்சிக்கும்பல் தொடர்ந்து போராட்டம்நடத்தி வந்தது.

அதற்குப் பின் ராணுவம் ஆட்சியைப் பிடித்தது. ராணுவத்துக்கும், புரட்சிக்கும்பலுக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தைக்குப்பின் ஏறத்தாழ 56நாட்களுக்குப்பின் கடத்தப்பட்ட பிரதமர் மகேந்திர செளத்ரி உள்பட பிணைக்கைதிகள் அனைவரும் விடுக்கப்பட்டனர்.

பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்ட சில தினங்களில் புரட்சிக்கும்பல் தலைவர் ஜார்ஜ் ஸ்பீடு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் தற்போது மகேந்திர பால் செளத்ரி தற்போது நியுசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

நியுசிலாந்து தலைநகர் வெல்லிங்டன்னில் அவர் பிரதமர் ஹெலன் கிளார்க்கை சந்தித்துப் பேசினார்.

அப்போது செளத்ரி கூறியதாவது:

பிஜி தீவில் கலகம் விளைவித்த ஜார்ஜ் ஸ்பீடு அவரது கும்பலைச் சேர்ந்த 12 பேருடன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அவரை விடுவிக்கக் கோரியும், இந்திய வம்சாவளியினர்களுக்கு உயர்பதவிகள் கொடுக்கக் கூடாது என்றும் கூறி பிஜியில் பூர்வகுடி மக்கள் பலஇடங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

குறிப்பாக இந்திய மக்களின் வீடுகளில் கொள்ளையடிப்பது, பயிர்களை அழிப்பது, போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்திய வம்சாவளியினர் தொடர்ந்து தாக்கப்பட்டு வருகிறார்கள். தலைநகர் சுவாவிலிருந்து பல கிலோமீட்டர் தொலைவிலுள்ள சிகாடாகோ பகுதியில்இந்தியர்களுக்குச் சொந்தமான பள்ளிக்கூடம் ஒன்று தீ வைத்துக் கொளுத்தப்பட்டுள்ளது.

இதனால் அங்கு வாழும் இந்திய மக்கள் அனைவரும் ஆஸ்திரேலியா மற்றும் நியுசிலாந்து நாடுகளுக்கு புகலிடம் தேடி போக ஆரம்பித்து விட்டனர்.

இந்தப் பிரச்சனைகளுக்கெல்லாம் காரணமானவர் ஜார்ஜ் ஸ்பீடுதான் அவரை மேல் தேசதுரோக வழக்குத் தொடர வேண்டும் என்று நியுசிலாந்துபிரதமரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார் செளத்ரி.

அதற்குப் பதிலளித்த நியுசிலாந்து பிரதமர் ஹெலன் கிளார்க், பிஜி தீவில் இந்திய மக்கள் துன்புறுத்தப்படுவது மிகவும் வருத்தம் அளிக்கக் கூடிய விஷயமாகும்.நியுசிலாந்து வெளியுறவுத்துறை அமைச்சர் பில் கோப் பிஜியில் வசிக்கும் இந்திய மக்களுக்கு ஏற்படும் பிரச்சனை குறித்து விசாரிப்பார். நியுசிலாந்து அரசுபிஜியில் வாழும் இந்திய மக்களுக்கு உதவி செய்யும் என்று உறுதியளித்தார் ஹெலன்.

ஐ.ஏ.என்.எஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+