கிணற்றில் விழுந்து தாய், 3 குழந்தைகள் சாவு

Subscribe to Oneindia Tamil

ஓசூர்:

நீச்சல் தெரியாத தாய் மற்றும் மூன்று குழந்தைகள் கிணற்றில் தவறி விழுந்து இறந்தனர்.

ஓசூர் சித்தாளப்பட்டியைச் சேர்ந்தவர் லட்சுமியப்பா. விவசாயி. இவரது மனைவி பாக்கியம்மாள்.

மகள் முனிரத்தினம், மகன்கள் குபேரசாமி, சங்கரன்.

சம்பவத்தன்று பாக்கியம்மாளும் அவரது மூன்று குழந்தைகளும் துணி துவைப்பதற்காக அங்குள்ள கிணற்றுக்குச் சென்றனர்.

பாக்கியம்மாள் துணி துவைத்துக் கொண்டிருக்கும்போது மகன்கள் இருவரும் கிணற்றுக்கு அருகே விளையாடிக் கொண்டிருந்தனர். ஆனால், இருகுழந்தைகளும் கிணற்றுக்குள் தவறி விழுந்தனர்.

அதிர்ச்சியடைந்த பாக்கியம்மாள் தன் குழந்தைகளைக் காப்பாற்றுவதற்காக கிணற்றுக்குள் குதித்தார். ஆனால் பாக்கியம்மாளுக்கு நீச்சல்தெரியாது. தாய்ப்பாசம் காரணமாக வேறு எதையும் சிந்திக்காமல் குழந்தைகளை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று கருதி கிணற்றுக்குள்குதித்து விட்டார்.

இதைப் பார்த்துக் கொண்டிருந்த மகள் முனிரத்தினமும் செய்வதறியாமல் கிணற்றுக்குள் குதித்து விட்டாள். யாருக்குமே நீச்சல் தெரியாததால் நான்கு பேரும்தண்ணீருக்குள் மூழ்கி இறந்தனர்.

பின்னர் நான்கு பேரின் சடலங்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேரும் கிணற்றில் தவறி விழுந்து இறந்த சம்பவம் அப்பகுதி மக்களை ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+