கோவை குண்டு வெடிப்பு வழக்கு விசாரணை ஒத்தி வைப்பு

Subscribe to Oneindia Tamil

கோவை:

கோவை குண்டு வெடிப்பு வழக்கு விசாரணை ஆகஸ்ட் மாதம் 17ம் தேதிக்கு நீதிபதிதணிகாசலம் ஒத்தி வைத்தார்.

கோவையில் கடந்த 98ம் ஆண்டு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இதில் 60க்கும்மேற்பட்டோர் இறந்தனர்.

இந்த வழக்குத் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி போலீசார் வழக்குப் பதிவு செய்து 167பேரைக் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை கோவையில் உள்ள தனிநீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இந்த வழக்கு விசாரணையில் செவ்வாய்க்கிழமையன்று 165 பேர் தனி நீதிமன்றத்தில்ஆஜர் செய்யப்பட்டனர்.

அல் உம்மா அமைப்பின் தலைவர் பாட்ஷா மற்றும் சித்திக் அலி ஆகியோர்சென்னையில் இருப்பதால் அவர்கள் அழைத்து வரப்படவில்லை.

எனவே, இருவர் தவிர, கேரள மாநில ஜனநாயக மக்கள் கட்சியைச் சேர்ந்த அப்துல்நாசர் மதானி உட்பட 165 பேர் ஆஜர் செய்யப்பட்டனர்.

இந்த வழக்குத் தொடர்பாக அனைவரும் வக்கீல்கள் வைத்து வாதாட நீதிபதிதணிகாசலம் வேண்டுகோள் விடுத்தார். இதில் 57 கைதிகள் வக்கீல்கள் வைத்துக்கொள்ள மறுத்தனர். மேலும், தங்கள் அனைவரையும் சிறையில் தனித் தனி அறையில்அடைக்கக் கூடாது என வேண்டுகோள் விடுத்தார்.

ஆனால், இந்த வேண்டுகோளை நீதிபதி தணிகாசலம் நிராகரித்தார். கைதிகள், ஒரேஅறையில் அடைக்கவில்லை என்றால் வழக்கு நடத்த ஒத்துழைக்கப் போவதில்லைஎன தொடர்ந்து வலியுறுத்தினர்.

ஆனால், நீதிபதி தணிகாசலம், இந்தக் கோரிக்கையை ஏற்காமல், வழக்கை ஆகஸ்ட்17ம் தேதிக்கு ஒத்தி வைப்பதாக அறிவித்து விட்டு எழுந்து சென்று விட்டார்.

ஆனால் கைதிகள் தொடர்ந்து ஒரு மணி நேரம் நீதிமன்றத்திற்குள் அமர்ந்து தர்ணாப்போராட்டம் நடத்தி விட்டு எழுந்து சென்றனர்.

உடுமலைக் குண்டு வெடிப்பு வழக்கு: உடுமலைப் பேட்டையில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பான வழக்கையும் வரும் ஆகஸ்ட் 14ம் தேதிக்கு நீதிபதிஒத்தி வைத்தார்.

உடுமலைப் பேட்டையில் கடந்த 1997ம் ஆண்டு சைக்கிள் வெடிகுண்டு வெடித்தது.இதில் மூன்று பேர் இறந்தனர்.

இந்த வழக்கும் கோவை தனி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்குத்தொடர்பாக 9 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர். இவர்களின் சார்பாகவக்கீல்கள் ஆஜராகினர்.

இந்த வழக்கையும் நீதிபதி தணிகாசலம் இம்மாதம் 14ம் தேதிக்கு ஒத்தி வைத்தார். இந்தவழக்கு விசாரணை 14ம் தேதி துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+