தமிழர்களுக்கு அதிகாரம்: சட்டதிருத்த மசோதா மீதான வாக்கெடுப்பு ஒத்திவைப்பு

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:

Chandrika இலங்கை நாடாளுமன்றத்தில் புதன்கிழமை நடைபெறவிருந்த புதிய அரசியல் சட்டதிருத்த மசோதா மீதான வாக்கெடுப்பு காலவரையறையின்றிஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இத்தகவலை நாடாளுமன்ற சபாநாயகர் ரதநாயகே தெரிவித்தார்.

இலங்கை இனப்பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில், நாடாளுமன்றத்தில் ஆகஸ்ட் 3 ம் தேதி பல எதிர்ப்புகளையும் மீறி புதிய அரசியல் சட்ட திருத்தமசோதா தாக்கல் செய்யப்பட்டது.

மசோதாவை அரசியல் விவகாரத்துறை அமைச்சர் பெரிஸ் தாக்கல் செய்தார். தமிழர்கள் அதிகம் வாழும் வடகிழக்கு மாகாணத்திற்கு அதிகஅதிகாரம் வழங்குவது, 2 லட்சத்துக்கும் மேல் உள்ள தமிழர்களுக்கு குடியுரிமை வழங்குவது போன்றவை இந்த மசோதாவில் அடங்கும்.

அதிபர் சந்திரிகாவின் பதவிக்காலம் ஆகஸ்ட் 24 ம் தேதியுடன் முடிவடைகிறது. இந்த நிலையில் சந்திரிகா புதிய அரசியல் சட்டதிருத்த மசோதாவைஅமல்படுத்தியே தீருவது என்ற கொள்கையில் உறுதியாக இருந்ததால் கடந்த வாரம் மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

மசோதாவுக்கு புத்த பிட்சுக்கள் கடும் எதிரிப்பு தெரிவித்து வருகின்றனர். மசோதாவை நிறைவேற்றுவது குறித்து எதிர்க் கட்சித் தலைவர்ரணில்விக்ரமசிங்கேவுடன் ஆலோசனை நடத்தினார். முதலில் ஆதரிப்பதாகக் கூறிய அவர் பின்னர் தனது நிலையை மாற்றிக் கொண்டுவிட்டார்.

ரணில் விக்ரமசிங்கே தலைமையிலான முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி கடைசி நேரத்தில் மசோதாவை ஆதரிக்க மாட்டோம் என்றுஅறிவித்துவிட்டது.

புதிய அரசியல் சட்டதிருத்தத்தில் பழைய அரசியல் சட்டத்தில் உள்ளது போல் தங்களுக்கு அதிக அதிகாரம் இல்லை என்று கூறி புத்த பிட்சுகள் இந்தமசோதாவை எதிர்த்து வருகினறனர்.

பிளாட், டி.யூ.எல்.எஃப் போன்ற அமைப்புக்களும், சிலோன் காங்கிரஸ் கட்சியும் மசோதாவை ஆதரிக்க மாட்டோம் என ஏற்கனவேஅறிவித்துவிட்டன.

நாடாளுமன்றத்தில் ஆளும்கட்சியான மக்கள் கட்சிக்கு 111 எம்.பி.க்கள் உள்ளனர். மொத்தம் உள்ள 225 எம்பிக்களில் 150 ஓட்டுக்கள்போட்டால் தான் மசோதா நிறைவேற்றப்படும்.

ஐக்கிய தேசியக் கட்சியில் உள்ள 7 எம்பிக்கள் சந்திரிகா அரசுக்கு ஆதரவாக வாக்களிப்பதாக அறிவித்துள்ளனர். அப்படியானால் ஆளும்கட்சியின்பலம் 118 ஆக உயரும். தமிழர் கட்சிகளின் ஆதரவு கிடைத்தாலும் கூட வாக்கெடுப்பில் வெற்றி பெற இன்னும் 10 ஓட்டுக்கள் தேவைப்படுகிறது.

தமிழர் கட்சிகளும் புதிய மசோதா குறித்து அதிர்ப்தியடைந்த நிலையிலேயே உள்ளன. ஆனால் இதையெல்லாம் புறக்கணித்து விட்டு மசோதா இலங்கைநாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கான விவாதம் ஆகஸ்ட் 7 ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி திங்கள்கிழமை விவாதம் நடந்தது. முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சி விவாதத்தில் கலந்து கொள்ளவில்லை.

பல்வேறு எதிர்கட்சி உறுப்பினர்களின் ஆதரவைப் பெற முடியும் என ஆளுங்கட்சி நம்பிக்கை தெரிவித்திருந்தது. இதையடுத்து பிற கட்சி எம்.பிக்களை அரசுவிலைக்கு வாங்கத் திட்டமிட்டுருப்பதாக புகார்கள் எழுந்தன. இதை சந்திரிகா மறுத்தார்.

சந்திரிகாவின் அமைச்சரவையில் உள்ள முக்கிய அமைச்சர்களில் ஒருவரான மஹிந்தா ராஜபக்ஷே, இலங்கை அதிபரை சந்தித்து இந்த மசோதாவிற்கு தனதுஎதிர்ப்பை தெரிவித்தார். இது சந்திரிகாவுக்கு விழுந்த மிகப் பெரிய அரசியல் அடியாகும்.

இந்த அமைச்சரை ஆட்டுவிப்பது மஹாநாயகா மற்றும் அஸ்கிரியா பிரிவைச் சேர்ந்த புத்த மத சாமியார்கள் ஆவர்.

ஜனதா விமுக்தி பெரமுணா மற்றும் பிற புத்த மத குருக்கள் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டு அமல்படுத்தப்பட்டால் இலங்கையில்பிரிவினைவாதிகள் வெற்றிக்கு வழி வகுத்து விடும் எனக் கூறி வருகினறனர்.

ஜனதா விமுக்தி பெரமுணா வெளியிட்ட அறிக்கையில், நாடாளுமன்ற உறுப்பினர்கள், தேச நலனைக் கருத்தில் கொண்டு இந்த மசோதாவை எதிர்த்துவாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டது.

இதற்கிடையே, ஆளும் கட்சியைச் சேர்ந்த ஒரு உறுப்பினர் எதிர்க்கட்சிக்கு சென்று விட்டார் என்று கூறப்படுகிறது. அதேபோல மேலும் முக்கியஎதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியும் தங்கள் கட்சியிலிருந்து இரண்டு அல்லது மூன்று உறுப்பினர்கள் ஆளும் கட்சியை ஆதரிக்கக்கூடும் எனசந்தேகிக்கின்றனர்.

இந்த நிலையில் எதிர்கட்சி மற்றும் பிற கட்சிகளின் எதிர்ப்புக்களை மீறி மசோதா மீதான வாக்கெடுப்பு நடத்துவதில் சந்திரிகா அரசுக்கு சிக்கல்ஏற்பட்டுள்ளது.

மசோதாவுக்கு ஆதரவாக 150 வாக்குகளைப் பெற முடியுமா என்பது சந்தேகமே. இதற்கிடையே 1,000 க்கும் மேற்பட்டோர் மசோதாவுக்குஎதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றத்துக்கு வெளியே செவ்வாய்க்கிழமை போராட்டம் நடத்தினர்.

இவர்களில் புத்த பிட்சுக்களும் அடங்குவர். அவர்கள் அங்கு போடப்பட்டிருந்த போலீஸ் பாதுகாப்பையும் மீறி மசோதாவுக்கு எதிரான கோஷங்கள்போட்டனர்.

இதனால் மசோதா மீதான வாக்கெடுப்பில் வெற்றி பெறுவதில் சந்திரிகா அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது. இதையடுத்து புதன்கிழமை நடைபெறுவதாகஇருந்த மசோதா மீதான வாக்கெடுப்பை சந்திரிகா அரசு காலவரையறையின்றி ஒத்திவைத்துவிட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+