For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மலேசியா: அன்வர் இப்ராகிமுக்கு 9 ஆண்டு சிறை

By Staff
Google Oneindia Tamil News

கோலாலம்பூர்:

மலேசியாவின் முன்ளாள் நிதியமைச்சர் அன்வர் இப்ராகிமுக்கு அந்நாட்டு நீதிமன்றம்பாலியல் (செக்ஸ்) வழக்கில் ஒன்பது ஆண்டுகாலம் சிறைத் தண்டனை விதித்துள்ளது.

அன்வரும் அவரது சகோதரர் சுக்மா தர்மாவானும் பாலியல் குற்றங்களை புரிந்தவர்கள்என்று அரசு தரப்பில் சந்தேகமின்றி நிரூப்பிக்கப்பட்டிருப்பதாக கூறி அவர்கள்இருவருக்கும் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இது அந்நாட்டில் கலவரத்தை தூண்டியுள்ளது. தண்டனை விதிக்கப்பட்ட இருவரும்இந்த தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய திட்டமிட்டுள்ளனர்.

தீர்ப்பையொட்டி நீதிமன்ற வளாகத்தில் அன்வரின் ஆதரவாளர்கள் பெரும்எண்ணிக்கையில் கூடியிருந்தனர். அதனால் அங்கு பலத்த போலீஸ் காவல்போடப்பட்டது.

இப்போது ஊழல் குற்றம் தொடர்பாக 6 ஆண்டு சிறை தண்டனையை அனுபவித்துவருகிறார் அன்வர். இந்த தண்டனை 2003ல் முடியும். இதன் பின்னர் பாலியல்குற்றத்துக்கான தண்டனையாக 9 ஆண்டு காலம் அவர் சிறையில் இருக்க வேண்டும்.

சுகாமாவுக்கு 6 ஆண்டு சிறைத் தண்டனையும் நான்கு சவுக்கடிகளும் கொடுக்கப்படவேண்டும் என தீர்ப்பளிக்கப்பட்டிருக்கிறது.ஆனால் அவரது மேல் முறையீட்டில் இதுரத்து செய்யப்பட்டது.

49 வயதுக்குட்பட்டவர்களுக்கே சவுக்கடி கொடுக்கப்பட வேண்டும் என சட்டம்உள்ளது. அன்வருக்கு வியாழக்கிழமையன்று 53 வயதானது. அதனால் அவர்சவுக்கடியிலிருந்து தப்பினார்.

மலேசிய சட்டப்படி அன்வர் சிறையில் வெளிவந்த நாள் முதல் ஐந்து ஆண்டுகள் அரசுபதவி வகிக்க முடியாது. இதன்படி அன்வர் 2019-ம் ஆண்டுவரை அரசு பதவிஎதையும் வகிக்க முடியாது.

அன்வரின் வக்கீல் பெர்னான்டோ இந்த தீர்ப்பு அதிர்ச்சியளிப்பதாக கூறியுள்ளார்.

முன்னதாக எதிர்க்கட்சி தலைவர் உட்பட இரண்டு பேரும், அன்வர் வழக்குநேர்மையான முறையில் நடத்தப்பட வேண்டும் என அரசை எதிர்த்து போராட்டம்நடத்தியவர்களும் கைது செய்யப்பட்டனர்.

அன்வர் 1998-ல் பலத்த எதிர்ப்புக்கிடையே பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

மலேசிய நீதிமன்றத்தால் பாலியல் வழக்கில் 9 ஆண்டு சிறைத் தண்டனைவழங்கப்பட்ட அன்வர் இன்னும் மலேசிய அரசியலில் பலம் வாய்ந்தவராகவேஇருக்கிறார்.

அன்வர் தன் மேல் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை வன்மையாக மறுக்கிறார். தன் மேல்போடப்பட்ட வழக்குகளும், சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளும் பிரதமரால்ஜோடிக்கப்பட்டவை.பிரதமருக்கு அடுத்தபடியாக தான் ஆட்சிக்கு வரக்கூடாதுஎன்பதற்காகவே இந்த வழக்குகள் போடப்பட்டது என்கிறார் அன்வர்.

ஆனால், பிரதமர் மகாதீர் முகமத் இதை மறுக்கிறார். அன்வர் பதவி வகிக்கதகுதியில்லாததால்தான் பதவி நீக்கம் செய்தேன். அவர் செய்த குற்றங்கள் இப்போதுநிரூபிக்கப்பட்டுவிட்டன என்கிறார் அவர்.

அன்வர் பதவி நீக்கம் செய்யப்பட்ட பிறகு பலரும் பிரதமரை பலரும் பதவி விலகச்சொல்லி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கடந்த நவம்பரில் நடந்த பொதுத் தேர்தலில் அன்வரின் மனைவி தொடங்கிய கட்சிகணிசமான வாக்குகளைப் பெற்று அரசியலில் நிலையூன்றியுள்ளது.

நீதிமன்றத்தின் சில காட்சிகள்:

பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு வந்த அன்வர் கண்களில் அடிபட்டும் உடலில்சிராய்புகாயங்களுடன் காணப்பட்டார்.

முன்னாள் காவல்துறை அதிகாரி அப்துல் ரஹீம் நூர், தானே அன்வரை ஜுன் மாதத்தில்தாக்கியதாக ஒப்புக் கொண்டுள்ளார்.

அன்று முதல் இன்று வரை அன்வர்

அன்வர் 1947-ம் ஆண்டு ஆகஸட் மாதம் 10-ம் தேதி பிறந்தார். குலாகன்ஸ்கர் நகரில்உள்ள புகழ் பெற்ற கல்வி நிறுவனமான மலாய் கல்லூரியில் கல்வி கற்றார். அப்போதேஇஸ்லாமிய இளைஞர் தலைவராக ஆனார்.

சர்வதேச பாதுகாப்பு சட்டத்தின் கீழ் 1974-ம் ஆண்டு நடந்த அரசுக்கு எதிரானபோரட்டத்தில் 20 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.

மஹாதீர் இவரை 1982-ம் ஆண்டு அரசியலுக்கு அழைத்து வந்தார். மஹாதீரின் கீழேஅவரையும் மிஞ்சும் அளவுக்கு வளர்ந்தார். அரசில் பல முக்கியத் துறைகளில்மந்திரியாக பதவி வகித்துள்ளார்.

அன்வர் முன்னாள் கண் டாக்டரும், எதிர்க்கட்சி தலைவருமான வான்அஜிஸ் வான் இஸ்மாயில் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்ததம்பதிகளுக்கு 6 குழந்தைகள் உள்ளன.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X