ஊட்டி பிலிம் ஆலையை மூட வைகோ கடும் எதிர்ப்பு
சென்னை:
ஊட்டியில் உள்ள ஹிந்துஸ்தான் போட்டோ பிலிம் ஆலையை மூடக்கூடாது என்றுமதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறினார்.
மக்களவையில் செவ்வாய்க்கிழமை அவர் பேசியதாவது:
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேருவால் 1960-ம்ஆண்டில் தொடங்கப்பட்டது ஹிந்துஸ்தான் போட்டோ பிலிம் ஆலை. இப்போதுமத்திய அரசு நிறுவனமாக செயல்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு மார்ச் 31-ம் தேதி நிலவரப்பட்டி இந் நிறுவனத்தின் மதிப்பு ரூ. 589கோடியாகும். 1991-ம் ஆண்டு இந்த ஆலையில் 4,110 பேர் பணியாற்றினர். ஆனால்,ஆலை நலிவடைந்துவிட்டதாகக் கூறி ஆயிரக்கணக்கான ஊழியர்களை நிர்வாகம்பணி நீக்கம் செய்தது.
இப்போது 2,600 பேர் மட்டுமே பணிபுரிகின்றனர். ஆலை நலிவடைந்ததற்கு அரசின்பொருளாதார தாராளமயமாக்கல் கொள்கைதான் காரணமாகும். தற்போது இந்தஆலையை மூட வேண்டுமென்று மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆலை அமைந்துள்ள நீலகிரி மாவட்டம், தொழில் துறையில் மிகவும் பின் தங்கியமாவட்டமாகும். நீலகிரி மாவட்டத்தில் பெரும்பான்மையாக வாழ்பவர்கள்பின்தங்கிய, தாழ்த்தப்பட்ட, பழங்குடி இனத்தைச் சேர்ந்த மக்கள்தான்.
ஆலை மூடப்பட்டால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்படுவார்கள். ஆகவே,எக்காரணம் கொண்டும் இந்த ஆலையை மூடக்கூடாது. ஆலையை சீரமைப்பதற்கானதிட்டத்தை மத்திய அரசு அமல்படுத்த வேண்டும்.
இத் திட்டத்துக்கு முதற்கட்டமாக ரூ. 145 கோடியை மத்திய அரசு ஒதுக்கவேண்டும்.நிதி ஒதுக்குவதுடன் மற்ற தேவையான நடவடிக்கைகளையும் மத்திய அரசுமேற்கொள்ளவேண்டும் என்றார் வைகோ.












Click it and Unblock the Notifications