வீரப்பன் கும்பல் இடமாற்றம்
பெங்களூர்:
நடிகர் ராஜ்குமார் மற்றும் அவரது உறவினர்கள் மூன்று பேருடன் வீரப்பன் கும்பல் தலைமலை காட்டிலிருந்து அரகாடு காட்டுப் பகுதிக்கு இடம்மாறியுள்ளனர்.
வீரப்பன் தனது கும்பல் மற்றும் கடத்தப்பட்டவர்களோடு சிக்கஹள்ளி காட்டின் அருகிலுள்ள இக்கலூரு பாலேபடிகே என்ற இடத்தில் சனிக்கிழமை வரைதங்கி இருந்தார்.
ஆனால் இப்பகுதியில் சாதாரண உடையில் இருந்த அதிரடிப் படை போலீஸ்காரர் ஒருவருக்குத் தெரிந்து விட்டதால் தனது இருப்பிடத்தை கர்நாடகா-தமிழ்நாடுஎல்லையை ஒட்டியுள்ள சிக்காரே-கொட்டாரேகுன்றுகளின் அருகில் உள்ள அரகாடு என்ற அடர்ந்த காட்டுப் பகுதிக்கு மாற்றப்பட்டிருப்பதாகக்கூறப்படுகிறது.
காரம்பாளையம் என்ற பகுதியிலிருந்து காட்டு வழியாக மூன்று நான்கு கிலோ மீட்டர் தூரம் சென்றால் ஆலைமலை சுவாமி கோவில் உள்ளது.அக்கோவிலில் வீரப்பன் பூஜை செய்து விட்டு பக்கத்தில் உள்ள அரகாடு காட்டுப்பகுதிக்கு சென்றான்.
கோவில் அருகே உள்ள குடிசை வீடு ஒன்றில் சிறிது நேரம் ஓய்வெடுத்துவிட்டு வீரப்பன் அரகாடு பகுதிக்குச் சென்றுள்ளான்.
வீரப்பன் தனது தங்கும் இடத்தை மாற்றுவது புதிதல்ல. சிறுசிறு விஷயங்களுக்கெல்லாம் சந்தேகப்படும் அவர் இரவு நேரங்களிலும் ஒரே இடத்தில்தங்குவது கிடையாது. ஒரே இரவில் இரண்டு, மூன்று இடங்களுக்கு இடமாற்றம் செய்யும் பழக்மும் வீரப்பனுக்கு உண்டு.
கர்நாடக அரசு காட்டிலாகா அதிகாரிகளுக்கு அவசர செய்தி ஒன்றை அனுப்பி வீரப்பன் நடமாடும் பகுதியில் தேடும் பணியில் ஈடுபடக்கூடாது என்றுஉத்தரவிட்டிருப்பதால் வீரப்பன் நடமாடும் பகுதியில் உளள அனைத்து காட்டிலாகா ஊழியர்களும் காட்டுப் பகுதியில் இருந்து வெளியே வந்துள்ளனர் என்றுகாட்டிலாகா வட்டாரம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications