தப்பிச் செல்லும் தமிழர்களின் படகுகளை செஞ்சிலுவைச் சங்கம் பாதுகாக்கும்
கொழும்பு:
யாழ்பாணத்திலிருந்து தப்பி படகுகள் மூலம் வெளியேறும் அப்பாவி தமிழர்களுக்கு பாதுகாப்பு வழங்க சர்வதேசசெஞ்சிலுவைச் சங்கம் முன் வந்துள்ளது.
அகதிகள் செல்லும் படகுகளுக்கு பாதுகாப்பு தருமாறு இலங்கை அரசு கேட்டுக்கொண்டது. இதனை நாங்கள்ஏற்றுக் கொண்டுவிட்டோம். இது தொடர்பாக அரசுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளோம் எனசெஞ்சிலுவைச் சங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.
யாழ்பாணம்-திருகோணமலை இடையிலான கடல் பயணத்தில் ராணுவத்தின் இடையூறு இருக்கக் கூடாது என்றுஅரசிடம் கூறிவிட்டோம். இனி இந்த பாதையில் ராணுவத்தினர் இயங்க மாட்டார்கள்.
அதே போல இந்த அகதிகளுக்கு எந்த ஆபத்தையும் விளைவிக்க மாட்டோம் என விடுதலைப் புலிகளும் எழுதிக்கொடுத்துள்ளனர் என்று செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது.
யாழ்பாணத்தில் கடும் போர் தொடங்கியது முதல் யாழ்பாணம்-திரிகோணமலை இடையிலான கடல் போக்குவரத்துபாதிக்கப்பட்டது. தெற்கு யாழ்பாணம் முழுக்கவும் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு ராணுவமும்புலிகளம் அவ்வப்போது கடும் சண்டையில் ஈடுபட்டு வருவதால், கடல் மற்றும் வான் மூலம் மட்டுமே நாட்டின் பிறபகுதிகளுக்கு ராணுவமோ, பொது மக்களோ செல்ல முடியும் என்ற நிலை உள்ளது.












Click it and Unblock the Notifications