சாவுடன் ஒரு போட்டி...விவசாயியின் தூக்குதண்டனை 6-வது முறையாக நிறுத்திவைப்பு

Subscribe to Oneindia Tamil

கோவை:

கோவையில், கொலை வழக்கில் தொடர்புடைய விவசாயி கோவிந்தசாமிக்கு விதிக்கப்பட்டுள்ள தூக்கு தண்டனை மீண்டும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி. விவசாயி. நிலத்தகராறு காரணமாக இவர் தன் உறவினர்கள் 5 பேரைவெட்டிக் கொலை செய்தார்.

பின்னர் போலீஸாரால் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டார். இவரது வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் இவருக்குதூக்கு தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது.

இதையடுத்து இவர் தமிழக கவர்னருக்கும், ஜனாதிபதி கே.ஆர்.நாராயணனுக்கும் கருணை மனுச் செய்தார். அந்த இரண்டு மனுக்களும் நிராகரிக்கப்பட்டது.

இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை கோவிந்தசாமிக்கு தூக்கு தண்டனை அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கிடையே இவரது தூக்குத்தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஜெயிலர் செந்தூரப்பாண்டியன் இதுகுறித்துக் கூறுகையில், கோவிந்தசாமிக்குவிதிக்கப்பட்ட தூக்குதண்டனையை எதிர்த்து அவர் மத்திய உள்துறை அமைச்சகத்துக்குக் கருணை மனு அனுப்பியிருந்தார்.

உள்துறை அமைச்சகத்திலிருந்து திங்கள்கிழமை இரவு கோவிந்தசாமிக்கு அளிக்கப்பட வேண்டிய தூக்குதண்டனையை நிறுத்தி வைக்கும்படி ஃபேக்ஸ் மூலம்தகவல் அனுப்பியிருந்தார்கள். இதையடுத்து இவரது தூக்கு தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்றார் செந்தூரப்பாண்டியன்.

இவருக்கு வழங்கப்பட்ட தூக்குதண்டனை இதுவரை 5 முறை நிறுத்தி வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+