For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வீரப்பனை கோபாலால் சந்திக்க முடியவில்லை

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:
வீரப்பன் விவகாரத்தால் நாளுக்கு நாள், இரண்டு மாநில அரசுகளுக்கும் இடையேடென்ஷனை அதிகரித்துக் கொண்டிருக்கிறது.

கடந்த 29-ம் தேதி இரவு, கன்னட நடிகர் ராஜ்குமாரை கடத்திய வீரப்பன் இன்று வரைவிடுவிக்கவில்லை. வீரப்பனை இரு மாநில அரசுகளுமே கவலையோடுபார்த்துக்கொண்டிருக்கின்றன.

அரசு தூதுவராக நக்கீரன் பத்திரிகையின் ஆசிரியர் கோபால் வீரப்பனை சந்திக்கஅனுப்பப்பட்டார். அவர் கூட சீக்கிரத்தில் வீரப்பனை சந்திக்கமுடியவில்லை என்பதுபலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. பல நாள் கத்திருப்புக்குப் பின் ஒரு வழியாகஅவர் வீரப்பனை சந்தித்துள்ளார்.

வீரப்பனின் பத்து கோரிக்கைகள் வெளிவருவதற்கு முன்பாகவே, ராஜ்குமார் பேசியகேஸட் ஒன்று வீரப்பன் தரப்பில் இருந்து அனுப்பிவைக்கப்பட்டது. பாண்டிச்சேரியில்உள்ள ஒரு வாரப் பத்திரிகை நிருபரின் மூலமாக ராஜ்குமாரின் கேஸட் தீடீரென்றுவந்தது, பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

தொடர்ந்து வீரப்பனின் கோரிக்கைகளும் கேஸட்டில் பதிவு செய்யப்பட்டு தமிழக,கர்நாடக அரசுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பத்து கோரிக்கைகளுமேதமிழகத்தின் பொது நலன் அடிப்படையில் இருந்தது தான் தமிழக அரசியலையும்கலக்கியிருக்கிறது.

நமது அரசியல்வாதிகள் தேர்தல் நேரத்தில் மட்டும் பேசும், காவிரி நிதி நீர்பிரச்சனையில் ஆரம்பித்து, நீலகிரி, மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள்பிரச்சனை வரை பத்து கோரிக்கைகளை அடுக்கி, தனது அரசியல் ஆர்வத்தைவெளிப்படுத்தி அரசியல்வாதிகளை மிரட்டியிருக்கிறார் (நமக்கு இன்னொருபோட்டியா!) வீரப்பன்.

கேஸட்டில் தனக்கு பொதுமன்னிப்பு வேண்டும், பணம் வேண்டும் என்கிறகோரிக்கைகள் இல்லாதது வீரப்பனிடம் வேறு ஏதோ ஒரு பெரிய திட்டம் இருக்கிறதுஎன்பதையே காட்டுகிறது.

கோரிக்கைகளை உள்ளடக்கிய கேஸட் இரு மாநிலகங்களுக்குமே தனித்தனியாககடந்த 5-ம் தேதியே வீரப்பன் தரப்பில் அனுப்பிவைக்கப்பட்டது. தமிழக அரசுதனியாக கோரிக்கைகள் பற்றி யோசித்துக்கொண்டிருந்த நிலையில், கர்நாடகாவிலும்முதல்வர் கிருஷ்ணாவும் யோசித்தார். 6-ம் தேதி இரு முதல்வர்களும் சென்னையில்சந்தித்தனர்.

கோரிக்கைகள் பற்றி விவாதிக்கப்பட்டது. பதிலும் சொல்லப்பட்டு அன்றே, அரசு தூதர்கோபால் மூலம் வீரப்பனுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அரசு தரப்பிலிருந்து கோரிக்கைகளுக்கான பதில் கோபால் மூலமாக வீரப்பனுக்குநேரடியாக சென்றடையவில்லை. இன்னொரு நடுவர் மூலமாகவே சென்றடைந்துள்ளதுஎன்று சொல்லும் அதிகாரிகள், கோபால் ,வீரப்பனை நேரடியாக சந்திக்கவில்லை.விஷயங்கள் மட்டும் பரிமாறிக் கொள்கிறார்கள் என்றும் சொல்கிறார்கள்.

கோபால் மூலமாக கோரிக்கைகளுக்கான பதில் வீரப்பனை சென்றடைந்து விட்டது.ஆனால் இன்னும் வீரப்பன் தரப்பிலிருந்து பதில் வரவில்லை. கோபால், வீரப்பனைநேரடியாக சந்திக்க முடியாததும் பலரை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

வீரப்பன் கோரிக்கை அனுப்பிய கேஸட்டில் உள்ள குரல் வீரப்பனுடையது இல்லைஎன்கிறார்கள் தமிழக அதிகாரிகள். இதுவரை வீரப்பன் பல முறை கேஸட்கள்அனுப்பியுள்ளார். பழைய கேஸட்களில் உள்ளது மாதிரி இதில் பேச்சுக்கள் இல்லை.வேறு ஒருவருடையகுரலே இதில் இருக்கிறது. வீரப்பனும் தற்பொழுது தனி நபராகஇல்லை. வீரப்பன் இப்பொழுது மிகுந்த ஆள்பலத்துடனும் இருக்கிறார் என்கிறார்கள்.

தனித் தமிழ்நாடு என்கிற கோரிக்கைகளுடன் தமிழகத்தின் வட மாவட்டங்களில்தீவிரமாக செயல்பட்டுவரும் தமிழ்நாடு விடுதலைப்படை என்கிற ரகசிய தீவிரவாதஇயக்கத்தில் உள்ள இளைஞர்கள் பலர் இப்பொழுது வீரப்பனுடன் இருக்கிறார்கள்.

அவர்கள் தான் இப்பொழுது வீரப்பனுக்கு வலது கரமாக செயல்படுவதாகவும் தமிழககாவல்துறை வட்டாரங்களில் சொல்கிறார்கள். இதற்கு முன்பு வரை, பொதுமன்னிப்பு,ரூபாய் என்று கோரிக்கை வைத்துவந்த வீரப்பன் இம்முறை தமிழகத்தில் உள்ளபொதுப்பிரச்சனைகள் குறித்து கோரிக்கைவைத்துள்ளது வீரப்பனுடன் இணைந்துள்ளதீவிரவாத இயக்கத்தினரின் தூண்டுதலாகவே இருக்கும் என்றும் சொல்கிறார்கள்அதிகாரிகள்.

இதுவரை, வீரப்பனை எந்தத் தடையும் இல்லாமல் சந்தித்துவந்த நக்கீரன் கோபால்,இந்தமுறை இன்னும் சந்திக்கமுடியாமல் இருப்பதற்கு காரணம், வீரப்பனுடன்இணைந்துள்ள தீவிரவாத இளைஞர்களாக இருக்கலாம் என்று நினைக்கிறார்கள்அதிகாரிகள்.

வீரப்பனும் முழுமையாக தீவிரவாத இளைஞர்களின் பேச்சைகேட்கஆரம்பித்துவிட்டார் என்றே சொல்கிறார்கள்.

வீரப்பன் கோரிக்கைகள் பத்து மட்டும் தானா? என்கிற கேள்விகளும் எழுந்துள்ளன.கேஸட் கிடைத்து இரு மாநில அரசுகளும் இரண்டு நாட்களுக்குப் பிறகு தான்கோரிக்ககைளுக்கான பதிலை கலந்தாலோசித்து பதில் சொன்னார்கள்.

வீரப்பன் அனுப்பிய பல கோரிக்கைகளில் பத்து கோரிக்கைகளை மட்டும்தேர்ந்தெடுத்து அதற்கு மட்டும் பதிலைச் சொல்லிவிட்டார்கள். இன்னும் பலகோரிக்கைகளை வெளியே சொல்லவே இல்லை என்றும் பேசுகிறார்கள் தமிழ போலீஸ்வட்டாரங்களில்.

இதனால் தான் வீரப்பனிடம் இருந்து மெளனம் ஒன்றே பதிலாக தொடர்ந்துகொண்டிருக்கிறது என்றும் சொல்கிறார்கள் அதிகாரிகள்.

அரசு தூதர், நக்கீரன் கோபாலிடம் இருந்து எந்த நேரமும் நல்ல தகவல்கள் வரலாம்என்று இரு மாநில அரசும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X