வைகோ மீது தி.மு.க போட்ட வழக்கு வாபஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தி.மு.க கொடி மற்றும் உதயசூரியன் சின்னத்தை பயன்படுத்த தடை விதிக்க கோரி கட்சியின் பொதுச்செயலாளர் அன்பழகன், வைகோ மீது தாக்கல் செய்தவழக்கை திங்கள்கிழமை வாபஸ் பெற்றுக் கொண்டார்.

கடந்த 94 ம் ஆண்டு வைகோ தி.மு.கவிலிருந்து பிரிந்து ம.தி.மு.க என்று தனிக்கட்சி துவக்கினார்.

அப்போது தி.மு.க பொதுச்செயலாளர் அன்பழகன் தி.மு.க.வினரின் கருப்பு சிவப்பு கொடி மற்றும் உதயசூரியன் சின்னத்தை வைகோ பயன்படுத்த தடை விதிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இவ்வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் வழக்கு முடியும்வரை உதயசூரியன் சின்னத்தையும், கொடியையும் வைகோ பயன்படுத்தத் தடை விதித்துஉத்தரவிட்டது.

பின்னர் இவ்வழக்கு 1996 ம் ஆண்டு சிட்டி சிவில் கோர்ட்டுக்கு மாற்றப்பட்டது. அங்கு விசாரணை நடந்து வருகிறது.

இதற்கிடையே இவ்வழக்கை வாபஸ் பெற முடிவு செய்துள்ளதாக திங்கள்கிழமை அன்பழகன் தரப்பில் அவரது வக்கீல் சிட்டி சிவில் கோர்ட்டில்மனுத்தாக்கல் செய்தார்.

மனுவை ஏற்ற சிட்டி சிவில் கோர்ட் நீதிபதி பூபாலன் வழக்கை வாபஸ் பெற அனுமதியளித்து உத்தரவிட்டார்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+