அமெரிக்காவில் முஷாரபை சந்திக்க வாஜ்பாய் மறுப்பு
வாஷிங்டன்:
அமெரிக்காவில் அடுத்த மாதம் நடக்கவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மில்லினியம் கூட்டத்தில் பிரதமர்வாஜ்பாய் கலந்து கொள்கிறார்.
ஆனால், இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளும் பாகிஸ்தானின் ராணுவ ஆட்சியாளர் பர்வேஸ் முஷாரபை அவர்சந்திக்க மாட்டார் எனத் தெரிகிறது. வாஜ்பாயையும் முஷாரபையும் சந்திக்க வைக்க அமெரிக்க முயற்சிகள்மேற்கொண்டு வந்தது.
ஆனால், சமீபத்தில் காஷ்மீரில் யாத்ரீகர்கள் உள்பட 100 பேர் பாகிஸாதான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகளால்சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து முஷாரபுடன் கைகுலுக்கக் கூட வாஜ்பாய் மறுத்துவிட்டதாகத் தெரிகிறது.இதனால், அமெரிக்காவின் முயற்சி தோல்வியடைந்துள்ளது.
அதே போல பாகிஸ்தான் குழுவுடன் இந்தியக் குழு எந்தப் பேச்சுவார்த்தையிலும் ஈடுபடாது. செப்டம்பர் மாதம் 5ம்தேதி முதல் 17ம் தேதி வரை வாஜ்பாய் அமெரிக்காவில் இருப்பார்.
இது குறித்து அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் நரேஷ் சந்திரா கூறுகையில், இந்தியாவுடன் எப்போதுவேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் பேசத் தயார் என பாகிஸ்தான் கூறுகிறது. இந்தியாவின்வன்முறையை தூண்டிவிட்டுவிட்டு பேச்சுவார்த்தைக்கு பாகிஸ்தான் தயார் என்றால், அதற்கு நாங்கள் தயாராகஇல்லை.
அதற்குப் பதிலாகத் தான் வன்முறையை நிறுத்த முன் வரும் தீவிரவாதிகளுடனேயே நேரடியாக நாங்கள் பேசிவருகிறோம் என்றார்.
இந் நிலையில் அமெரிக்கா வந்துள்ள வாஜ்பாயின் பத்திரிக்கை தொடர்பு அதிகாரி எச்.கே. துவா, வாஷிங்டன்டைம்ஸ், வாஷிங்டன் போஸ்ட் நாளிதழின் ஆசிரியர்கள், ரிப்போர்களுக்கு லஞ்ச் அளித்தார். பின்னர்அவர்களுடன் இந்திய-பாகிஸ்தான் பிரச்சனை குறித்து விவாதித்தார். அவர் நியூயார்க் டைம்ஸ் ஆசிரியர்குழுவையும் சந்தித்துப் பேசுவார் எனத் தெரிகிறது. இந்தியாவின் நிலையை தெளிவுபடுத்த நாம் என்ன செய்யவேண்டும் என்பது குறித்து அவர்களுடன் துவா பேசுவார் என இந்திய தூதர் சந்திரா கூறினார்.
ஆசியாவையும் தாண்டி இந்தியாவால் சர்வதேச விஷயங்களில் தலையிட முடியும் என அமெரிக்கா கருதுகிறது.சாப்ட்வேர் துறையில் முன்னணியில் இருப்பதும், பொருளாதாரத்தை தாராளமயமாக்கியதும் இந்த விஷயத்தில்இந்தியாவுக்கு சாதகமாக அமைந்துள்ளது.












Click it and Unblock the Notifications