For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கொலை, கொள்னை, கடத்தல் தெரியும் என்பதால் அரசியலுக்கு வர வீரப்பன் திட்டம்?

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

கொலை, கொள்ளை, மிரட்டல், கடத்தல் என இந்திய அரசியல்வாதிகளுக்கு உரியஅனைத்து அம்சங்களும் தன்னிடம் இருப்பதாலோ என்னவே சந்தன மர கடத்தல்வீரப்பன் அரசியலில் குதிக்க திட்டமிட்டிருக்கிறார் எனத் தெரிகிறது.

வீரப்பன் தாளாவாடி, சத்தியமங்கலம் காட்டுப்பகுதிகளில் பல வருடங்களாகராஜாங்கமே நடத்தி வருகிறார். அந்தக் காட்டுப் பகுதியே அவரது ஆளுகையில்உள்ளது எனக் கூறினால் அது மிகையாகாது.

இரு ஆண்டுகளுக்கு முன்பாக அவனது பலம் குறைந்து காணப்பட்டது.

அவருரடன் ஆறு அல்லது ஏழு பேரே இருந்தனர். தற்போது அவரது ஆள் பலம்அதிகரித்துள்ளது. அதை அவரே கேசட் மூலம் தெரிவித்துள்ளார்.

ராஜ்குமார் மனைவியும் வீரப்பன் 12 பேருடன் வந்ததகாக கூறியுள்ளதன் மூலம்அவனது ஆள் பலம் அதிகரித்திருப்பது உண்மை தான் என்பது நிச்சயமாகியுள்ளது.

அவரது கும்பலில் புதிதாக சேர்ந்திருப்பவர்கள் தமிழக விடுதலைப் படையை(டி.என்.எல்.ஏ.) சேர்ந்தவர்களாக இருக்கலாம் என கருதப்படுகிறது.

ராஜ்குமாரை விடுவிக்க வீரப்பன் விதித்துள்ள நிபந்தனைகள் டி.என்.எல்.ஏ.யுடன்அவனுக்கு இருக்கும் என்ற சந்தேகத்தை அதிகப்படுத்துவதாகவே உள்ளன.

இது வரை முன்பு நடந்த கடத்தல் சம்பவங்களின் போது அவர் பணயக் கைதிகளைவிடுவிக்க விதித்த நிபந்தனைகள் தற்போது அவர் விதித்த நிபந்தனைகளிலிருந்துமுற்றும் வேறுபட்டது

அவர் எப்போதும் பணம் கேட்டும், பொது மன்னிப்பு கேட்டுமே நிபந்தனைவிதித்துவந்தான். ஆனால் இப்போது மாஞ்சோலை விவகாரம், தேயிலை விவசாயிகள்விவகாரம் என்று முழுக்க முழுக்க நிபந்தனைகளில் அரசியல் வாசம் வீசுகிறது.

டி.என்.எல்.ஏ. இயக்கத்தினருடன் உள்ள தொடர்பால் அரசியல் பிரவேசிப்பதற்குமுன்னோட்டமாக இந்த கோரிக்கைகளை வீரப்பன் முன் வைத்திருப்பதாகக்கூற்பபடுகிறது.

வீரப்பன் மனைவி முத்துலட்சுமியும் தன் கணவர் அரசியலுக்கு வரூவார் எனதெரிவித்துள்ளார். அவர் என்றுமே ஏழைகளுக்கு உதவ விரும்புபவர். அவர்இப்போது தெரிவித்துள்ள கோரிக்கைகள் ஏவைகளுக்கு உதவுவதாக அமைந்துள்ளதில்வியப்பில்லை. அவருக்கு என்றுமே பணத்தாசை கிடையாது.

அவருடன் தீவிரவாதிகளள் இருக்க வாய்ப்பு கிடையாது. தீவிரவாதிகள் பணத்தாசைபிடித்தவர்கள் என்பதால் அவர்களை என் கணவர் தன்னோடு அவர்களை சேர்த்துக்கொள்ள மாட்டார் என்று முத்துலட்சுமி கூறியுள்ளார்.

ஒருவேளை பொது மன்னிப்பு வழங்கப்பட்டால், காட்டை விட்டு வெளியே வரவீரப்பன் நினைக்கலாம். அப்போது ஒரு வில்லனாக அல்லமால், ஒரு ஹீரோவாகநாட்டுக்குள் நுழையத் தான் வீரப்பன் இந்த அரசியல் ஸ்டைல் நிபந்தனைகள்விதித்துள்ளார் என்கிறார் ஒரு மூத்த போலீஸ் அதிகாரி.

இதையெல்லாம் வைத்துப் பார்க்கும் போது வீரப்பன் அரசியலுக்கு வருவதற்கானவாய்ப்புகள் அதிகம் என தெரிகிறது. உண்மை நிலை இன்னும் சில நாள்களில் தெரிந்துவிடும் என எதிர்பார்க்கலாம்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X