ராஜ்குமார் போட்டோக்கள், மேலும் ஒரு கேஸட் அனுப்புகிறார் வீரப்பன்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
வீரப்பனிடமிருந்து சில போட்டோக்களும் மேலும் ஒரு கேஸட்டும் புதன்கிழமை இரவுதமிழக அரசை வந்து சேரும் என்று தெரிகிறது.
நடிகர் ராஜ்குமாரை விடுவிப்பதில் இதுவரை எந்தவிதமான முன்னேற்றமும்ஏற்படவில்லை. இரு மாநில அரசுகளின் சார்பில் வீரப்பனுடன் பேச்சு நடத்தகாட்டுக்குள் சென்ற நக்கீரன் கோபாலும் இன்னும் ஊர் திரும்பவில்லை.
அவர் திரும்பி வந்த பின்னர் தான் வீரப்பன் குறித்தும் ராஜ்குமார் விடுதலை குறித்தும்முக்கிய தகவல்கள் கிடைக்கும்.
இந் நிலையில் வீரப்பன் மேலும் ஒரு கேஸட்டையும், ராஜ்குமார் நலமாய் இருப்பதைசுட்டிக் காட்டும் புகைப்படங்கள் சிலவற்றையும் தமிழக அரசுக்கு அனுப்பிவைத்திருப்பதாகத் தெரிகிறது. இந்த கேஸட்டும் புகைப்படங்களும் இன்னும் தமிழகஅரசை வந்து சேரவில்லை.
இரவுக்குள் அவை வந்து சேரும் என உயர் போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.












Click it and Unblock the Notifications