ஸ்ரீநகர் குண்டு வெடிப்பில் 13 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீர் மாநில தலைநகர் ஸ்ரீநகரில் வெடிகுண்டு வெடித்ததில் 13 பேர்இறந்தனர்.
ஸ்ரீநகரின் ரெசிடன்சி ரோடில் ஸ்டேட் பாங்க் கட்டடத்திற்கு அருகே இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இதில், 10 போலீஸ்காரர்கள், 2 ராணுவ வீரர்கள், ஒரு பத்திரிக்கைபுகைப்படக்காரர் உட்பட 13 பேர் கொல்லப்பட்டனர்.
சம்பவ இடத்தில், முதலில் ஒரு கிரனெட் குண்டு வெடித்த்து. வெடிச்சத்தம் கேட்டுபத்திரிககையாளர்களும், பாதுகாப்பு அதிகாரிகளும் அங்கு விரைந்தனர். அங்கு ஒரேகுழப்பமாக இருந்தது. இந்த நிலையில், அங்கு நின்று கொண்டிருந்த வெள்ளை நிறஅம்பாசிடர் காரில் இருந்த வெடிகுண்டு, ரிமோட் கண்ட்ரோல் மூலம் வெடிக்கச்செய்யப்பட்டது.
இதில் அங்கிருந்த 13 பேர் உயிரிழந்தனர். 15-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications