For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

18 கி.மீ. ஆங்கிலக் கால்வாயை நீந்திக் கடந்த 16 வயது சிறுமி

By Staff
Google Oneindia Tamil News

கே: தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித்தலைவரின் பணி என்ன?

ப:அவருக்கு பணி இருக்கிறது என்று கேட்பதில் இருந்தே, தமிழ்நாடு காங்கிரஸ்தலைவர் மீது உங்களுக்கு மிகுந்த மரியாதை இருப்பது தெரிகிறது.

கே:திராவிட ஆட்சிகளின் போது, ஆட்சியாளர்களின் பைகள் நிரம்பின; மக்கள்பைகள் காலியாகி விட்டது - என்று கருத்து கூறியுள்ளாரே தமிழ்நாடு காங்கிரஸ்கட்சித் தலைவர் இளங்கோவன்?

ப: தி.மு.க. வோடு கூட்டு இல்லை; சரி. ஜெயலலிதாவையும் விரோதித்துக் கொள்ளமுடிவெடுத்துவிட்டாரா? அவ்வளவு சீக்கிரம் தலைவர் பதவி சலித்துவிட்டதா?

கே: மேட்டூர் அணை நீர் மட்டமும் குறைகிறது; கர்நாடதா ஒப்புக்ககொண்டதன்ணீர் வரத்தும் இல்லை. ஆக காவிரியும் கிருஷணா கதி ஆகிவிடும் போல்தெரிகிறதே! தமிழக அரசு என்ன செய்தால் நல்லது?

ப: மற்ற மாநிலகளில் குடிநீர் பஞ்சம் எவ்வளவு மோசமாக இருக்கிறது என்று பட்டியல்தயாரிப்பது நல்லது.

கே; அரசியல்வாதியெல்லாம் தேர்தல் மேடைகளில் உண்மைையையே பேசத்தொடங்கினால்?

ப: மேடையை விட்டு கீழே இறங்குவதற்குள் கைது செய்யப்படுவார்கள்.

கே:பூலான்தேவிக்கு பொது மன்னிப்பு வழங்கியது மாதிரி, சந்தன வீரப்பனுக்கும்பொது மன்னிப்பு வழங்கி, சிறிது காலம் ஜெயில் தண்டனை கொடுத்து - பிறகுவிடுவித்தால் என்ன?

ப:சிறிது கால ஜெயில் தண்டனை என்பது உங்கள் குரூர மனப்பான்மையைக்காட்டுகிறது. உங்களுக்கு இரக்கமே இல்லையா? இதுதான் மனிதாபிமானமா?

கே: தமிழ்நாட்டில் திடீரென்று புதிது புதிதாக ஜாதிச் சங்கங்கள் உற்பத்தியாகி,நாங்கள் இல்லாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது என்று கூறுவது பற்றி...?

ப:சங்கங்கள் ஆரம்பிக்காத மற்ற ஜாதியினரும் ஜாதிச் சங்கங்களை ஆரம்பித்துவிட்டால், தமிழகமே சமத்துவபுரமாகி விடும். முதல்வரின் கனவு நிறைவேறும் நாள்நெருங்கிக் கொண்டிருக்கிறது.

கே: நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்டதற்கு பொறுப்பேற்று கருணாநிதி பதவிவிலக வேண்டும் -- என்று ஜெயலலிதா கூறியிருப்பது பற்றி...?

ப: ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் நடந்த கடத்தல் சம்பவங்களுக்கு ஜெயலலிதாராஜினாமா செய்திருந்தால், இப்போது அவர் கூற்றில் நியாயம் இருந்திருக்கும்.

கே: அரசு அதிகாரிகளை அரசியல்வாதிகளும்; அரசியல்வாதிகளை அரசுஅதிகாரிகளும் பரஸ்பரம் மதிப்பதில்லையே! இது ஏன்?

ப:மதிப்பதில்லை என்று சொல்ல முடியாது. பல வழக்குகளின் முடிவைப் பார்க்கும்போது, கூட்டாகச் செயல் படுகிறார்கள் என்றுதான் தோன்றுகிறது.

கே:ஜெயலலிதா கூறுவது போல் நடிகர் ராஜ்குமார் கடத்தலில், ஏதேனும்அரசியல் உள்நோக்கம் இருக்குமா...?

ப: பணம் பறிப்பது வீரப்பனின் நோக்கம் என்றால், அது அரசியல் நோக்கம்தானே.அந்த வகையில் ஜெயலலிதா கூறுவது சரிதான்.

கே:தீவிரவாத அமைப்புகள், இந்தியாவுக்குள் நடத்தும் ஆயுதக் கடத்தல்களைகண்காணிக்கிறோம் என அத்வானி தெரிவித்துள்ளாரே?

ப: கண்காணிக்கிறோம் என்று தானே சொல்கிறார். தடுக்கிறோம் என்று சொல்லமுடியவில்லையே!

கே:கள்ளச் சாராயத்தை அடியோடு ஒழித்தால், எனது ஒரு மாதச் சம்பளத்தைபோலீசாருக்குத் தருகிறேன் - என்று அமைச்சர் கோ.சி. மணி பேசியுள்ளாரே...?

ப: பல இடங்களில் போலீஸ் ஸ்டேஷனையே ஒழிக்க வேண்டியிருக்குமே. போலீசார்அதைச் செய்ய மாட்டார்களே. அந்த நம்பிக்கையில் சவால் விட்டிருக்கிறார் அமைச்சர்.

கே: அடையாள அட்டை இல்லாதவர்கள், ரேஷன் கார்டுகளை காண்பித்துவாக்களிக்கலாம் என்று செய்திகள் வருகின்றனவே? இது குறித்து தங்கள் கருத்து?

ப: ரேஷன் கார்டுகளால் ஒரு பயனும் இல்லை என்று இனி யாரும் சொல்ல முடியாது.

கே: பீகாரில் அரசியல் ஸ்திரத்தன்மையை குலைக்க காங்கிரஸ் விரும்பவில்லை,அதனால்தான் ராப்ரி தேவி அரசை காங்கிரஸ் ஆதரித்து வருகிறது - என்றுஅம்மாநில காங்கிரஸ் தலைவர் கூறியுள்ளது பற்றி...?

ப:படுகொலைகளும், வன்முறைகளும். ஊழல்களும் ஸ்திரமாக நடைபெற்றுவரும்போது, அந்த ஸ்திரத்தன்மையைக் குலைப்பது நியாயமல்ல என்று காங்கிரஸ்நினைக்கிறது.

கே: ஜாதிச் சங்கங்களை தடை செய்யும் எண்ணம் அரசுக்கு இல்லை - எனும்முதல்வர் கருணாநிதியின் கூற்று குறித்து தங்கள் விளக்கம் என்ன?

ப: உஷாராக இருக்கிறார். எந்தப் புற்றில் எந்தப் பாம்பு இருக்குமோ? எந்த ஜாதிச்சங்கத்தில் எவ்வளவு ஓட்டு இருக்குமோ?

கே: பேச்சு வார்த்தை நடத்த முன்வரும் தீவிரவாதக் குழுக்கள் மீது, மத்திய அரசுநடவடிக்கை எடுப்பதை நிறுத்தி வைத்துள்ளது பற்றி...?

ப: தீவிரவாதக் குழுக்கள் மீது மத்திய அரசு எடுக்கிற நடவடிக்கைகள் தொடர்ந்தாலும,நிறுத்தப்பட்டாலும் வித்தியாசம் எதுவும் இல்லை என்று காட்டுவதற்கு - இதை விடவேறென்ன் வழி இருக்கிறது.

கே: ஒரு சினிமா ஹிட் ஆவதற்கும், தேர்தலில் ஒரு கட்சி வெற்றி பெறுவதற்கும்தாய்க்குலங்களின் அமோக ஆதரவு தேவைப்படுகின்றது. ஆனால்பத்திரிக்கைகளின் விற்பனைக்கு அவர்களின் ஆதரவு தேவவைப்படுவதுஇல்லையே? ஏன்?

ப:நீங்கள் என்ன கூற வருகிறீர்கள்? பத்திரக்கைகளை விட சினிமாக்களின் தரம்மோசமாக இருப்பதற்கு இதுதான் காரணம் என்கிறீர்களா? சொலவதை நேரடியாகச்சொல்லுங்களேன்.

கே: ஜோதிபாசு அரசியலில் இருந்து ஓய்வு பெற்றால், அது மேற்கு வங்கசட்டசபைத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு பாதிபபைஏற்படுத்துமா?

ப:ஜோதிபாசுவே தலைமை வகித்தாலம் கூட, மார்க்சிஸ்ட் கூட்டணி பழைய அளவுககுவெற்றி பெற முடியுமா என்பது சந்தேகம்தான்.

கே: வரும் சட்டசபைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிட வேண்டும்என்பதே, காங்கிரஸ் தொண்டர்களின் விருப்பம் என்கிறாரே இளங்கோவன்?

ப: 234 தொகுதிகளிலும் போட்டியிட ஆள் இருக்கிறதா, பரவாயில்லையே!

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X