புலிகள் முகாம் மீது குண்டு வீச்சு: 13 பேர் சாவு
கொழும்பு:
இலங்கையில் மீண்டும் போர் துவங்கியுள்ளது. விடுதலைப் புலிகள் முகாம் மீது போர் விமானம் குண்டு வீசியது. இதில் 13 பேர் இறந்தனர்.
இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு அதிக அதிகாரம் வழங்குவதற்காக அதிபர் சந்திரிகா மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியைஅடைந்தது.
இதுதொடர்பாக அரசியல் சட்டத்தை திருத்த சந்திரிகா மேற்கொண்ட முயற்சி, பல்வேறு கட்சிகளின் எதிர்ப்பு காரணமாக கைவிடப்பட்டது. இந்த நிலையில்இலங்கை ராணுவ வீரர்கள் மீதான தாக்குதலை விடுதலைப்புலிகள் மீண்டும் துவக்கியுள்ளனர்.
இலங்கையின் வட பகுதியில் உள்ள வவுனியாவில் இருந்து மன்னார் நகருக்கு சென்ற ராணுவ ரோந்து படை மீது விடுதலைப்புலிகள் அதிரடி தாக்குதல்நடத்தினார்கள்.
இத்தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டனர். 8 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இறந்தோரில் ராணுவ அதிகாரி ஒருவரும் அடங்குவர். இந்தச்சம்பவம் தவிர திரிகோணமலையிலிருந்து அனுராதபுரத்திற்கு சென்று கொண்டிருந்த கடற்படையினர் சென்ற பஸ்சை விடுதலைப்புலிகள் வெடிகுண்டு வைத்துத்தகர்த்தனர்.
இதில் 3 பேர் பலியானார்கள். 28 பேர் படுகாயமடைந்தனர். அவர்களில் 4 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதற்கிடையே முல்லைத் தீவுஅருகே சாளையில் உள்ள விடுதலைப்புலிகளின் கடற்படை முகாம் மீது இலங்கை விமானம் குண்டு வீசியது. மிக் 27 ரக விமானம் மூலம் இந்தத் தாக்குதல்நடத்தப்பட்டது.
இந்த விமானத்தை உக்ரைன் நாட்டில் இருந்து சமீபத்தில் இலங்கை வாங்கியது. இஸ்ரேலிடமிருந்து போர் விமானம் வருவதில் தாமதம் ஏற்பட்டுஇருப்பதால் இலங்கை அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டது.
விடுதலைப்புலிகளிடம் விமான எதிர்ப்பு பீரங்கி இருப்பதால் இலங்கை விமானப்படை கவனமாகத் தாக்குதலை மேற்கொண்டதாகவும், விமானத்துக்குஎந்த சேதமும் ஏற்படவில்லை என்று அரசு செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருந்தது.
விமானம் குண்டு வீசியதில் விடுதலைப்புலிகளின் முக்கிய கடற்படை தளம் அழிக்கப்பட்டாதாகவும், இங்கு பெண்கள் முகாம் ஒன்று செயல்பட்டதாகவும்இலங்கை கூறியுள்ளது. புதன்கிழமை இரு தரப்பினருக்கும் இடையே நடந்த மோதலில் 13 பேர் பலியானார்கள்.












Click it and Unblock the Notifications