ஜம்மூவில் 2 இடங்களில் கண்ணி வெடி வெடித்து 5 வீரர்கள் பலி: 40 பேர் காயம்

Subscribe to Oneindia Tamil

ஜம்மூ:

ஜம்மூ-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் கண்ணி வெடி வெடித்ததில் பஸ்சில் பயணம் செய்த எல்லைப் பாதுகாப்புப்படை வீரர்கள் 4 பேர் மற்றும் இறந்தனர். சுமார் 33 பேர் காயமடைந்தனர். இதில் 13 பேரின் நிலைமை மிகமோசமாக உள்ளது.

இதே போல இதே சாலையில் இன்னொரு இடத்தில் நடந்த கண்டி வெடித் தாக்குதலில் ஒருவர் இறந்தார். 7 பேர்காயமடைந்தனர்.

ஞாயிற்றுக்கிழமை இந்த சம்பவம் நடந்தது. எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களை ஏற்றிக் கொண்டுஜம்மூவிலிருந்து நகருக்கு அந்த பஸ் சென்று கொண்டிருந்தது. பாரமுல்லாவில் பாதுகாப்பை பலப்படுத்துவதற்காகஅவர்கள் சென்று கொண்டிருந்தனர்.

உதம்பூரில் இருந்து 30 கிமீ தொலைவில் ஒரு குறுகிய வளைவில் பஸ் திரும்பியபோது கண்ணி வெடி வெடித்தது.இதில் பஸ் வெடித்துச் சிதறியது. 3 வீரர்கள் அந்த இடத்திலேயே இறந்தனர். மற்றொரு வீரர் மருத்துவனைக்க்குக்கொண்டு செல்லப்படும் வழியில் இறந்தார்.

13 பேர் பலத்த காயமடைந்தனர். இவர்கள் உதம்பூர் அரசு மருத்துவனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்தப் பகுதிகண்ணி வெடிகள் நிறைந்த பகுதியாகும்.

ஹிஸ்புல் முஜாஹீதீனின் வெறிச் செயல்:

இந்த கண்ணி வெடியை வைத்து தாக்குதல் நடத்தியது நாங்கள் தான் ஹிஸபுல் முஜாஹீதீன் அமைப்பு கூறியுள்ளது.இந்த அமைப்பின் செய்தித் தொடர்பாளர் சலீம் ஹஸ்மி ராவல்பிண்டியில் உள்ள ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம்தொலைபேசியில் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

எங்கள் அமைப்பின் கமாண்டர் சலீம் ஜாவீத் தலைமையிலான படை தான் இந்த கண்ணிவெடித் தாக்குதலைநடத்தியது. இதில் 8 எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் இறந்தனர். 35 பேர் காயமடைந்தனர். 15 பேர் நிலைமைமோசமாக உள்ளது என்று சலீம் ஹஸ்மி கூறினான்.

மத்திய அரசுக்கும் இந்த தீவிரவாத அமைப்புக்கும் இடையே நடந்து வந்த பேச்சுவார்த்தை பாகிஸ்தானால்தோல்வியடைந்தது. இதையடுத்து இந்த வெறிச் செயல்களில் ஹிஸ்புல் முஜாஹீதீன் ஈடுபட்டுள்ளது.

மேலும் ஒரு கண்ணி வெடி வெடிப்பு:

ஜம்மூவில் மேலும் ஒரு கண்ணி வெடித் தாக்குதலும் ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் நடந்தது.

ஸ்ரீநகர்-ஜம்மூ தேசிய நெடுஞ்சாலையில் உதம்பூர் அருகே இந்த கண்ணி வெடி வெடித்தது. இதில் ஒருவர் இறந்தார்.7 பேர் காயமடைந்தனர். சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 வாகனங்களும் சேதமடைந்தன.

இந்த வாகனங்களைத் தான் தீவிரவாதிகள் குறி வைத்து இந்தத் தாக்குதலை நடத்தியிருக்க வேண்டும் எனத்தெரிகிறது.

ஞாயிற்றுக்கிழமை சில மணி நேர இடைவெளியில் இந்த இரு கண்ணி வெடித் தாக்குதல்கள் நடந்துள்ளன. இரண்டுகுண்டுகளுமே ஒரே மாதிரியாக இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+