சுதந்திர தினம்: சென்னையில் வரலாறு காணாத பாதுகாப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னையில் பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சமீபத்தில் டெல்லியிலும் பிற இடங்களிலும் நடத்தப்பட்ட சோதனைகளில் பல தீவிரவாதிகள் பிடிபட்டனர்.பாகிஸ்தான் ஆதரவு பெற்ற இந்த தீவிரவாதிகளிடம் பாதிகாப்புப் படையினர் விசாரணை நடத்தியபோது சுதந்திரதினத்தன்று பெரும் தாக்குதல்கள் நடத்தித் திட்டமிட்டிருந்தது தெரியவந்தது.

டெல்லியில் பிடிபட்ட தீவிரவாதியிடமிருந்து வெடிபொருகளும், ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன.

இந் நிலையில் சுதந்திர தினத்தன்று காஷ்மீர், டெல்லி தவிர்த்து பிற இடங்களிலும் பாதுகாப்பை பலப்படுத்துமாறுமத்திய அரசுக்கு புலனாய்வு அமைப்புகள் எச்சரிக்கை விடுத்திருப்பதாகக் தெரிகிறது. இதையடுத்து உரியபாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து சென்னை உள்பட தமிழகத்தின் முக்கிய நகர்களிலும் போலீசார் தீவிர கண்காணிப்பில்ஈடுபட்டுள்ளனர்.

சென்னையில் முதல்வர் கருணாநிதி கொடியேற்றும் தலைமைச் செயலகம், சட்டசபை அமைந்துள்ள கோட்டையில்ஞாயிற்றுக்கிழமை போலீசார் கொடி அணிவகுப்பு நடத்தினர். இதை காவல்துறை அதிகாரிகள் பார்வையிட்டனர்.

இது தவிர சென்னையில் உள்ள முக்கிய கட்டடங்கள், தலைவர்களின் சிலைகள், எல்.ஐ.சி. கட்டடம், கவர்னர்மாளிகை, மாநகராட்சிக் கட்டடம் உள்ளிட்ட இடங்களில் ஆயுதம் தாங்கிய போலீசாரின் பாதுகாப்புப்போடப்பட்டுள்ளது.

இது தவிர தமிழகம் முழுவதுமே காவல்துறையினர் ரோந்துப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய்கள், ரகசிய பிரிவுப் போலீசார் ஆகியோரும் பாதுகாப்புப் பணியில்ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். முக்கிய மேம்பாலங்களிலும் இரவு-பகலாக துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பில்ஈடுபட்டுள்ளனர்.

சென்னையில் உள்ள 14 சோதனைச் சாவடிகளிலும் தீவிர வாகன சோதனை நடக்கிறது. சென்னைக்கு வரும்அனைத்து வாகனங்களும் தீவிர சோதனைக்குப் பின்பே அனுமதிக்கப்படுகின்றன.

ஹோட்டல்கள், சிறிய லாட்ஜ்கள் ஆகியவையும் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. சந்தேகப்படும்படியாகயாராவது தென்பட்டால் உடனே காவல்துறைக்குத் தகவல் தருமாறு பொதுமக்களுக்கு போலீசார் வேண்டுகோள்விடுத்துள்னர்.

சென்னை நகர் முழுவதும் 12,000 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை கமிஷ்னர்காளிமுத்து மற்றும் உயர் அதிகாரிகள் கவனித்து வருகின்றனர்.

ரயில் நிலையம், விமான நிலையம் ஆகியவையும் தீவிர கண்காணிப்பில் உள்ளன.

இதே போல தமிழகத்தின் பிற முக்கிய நகர்களிலும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+