காஷ்மீரில் ராணுவம், போலீசார் மீதான தீவிரவாதிகளின் தாக்குதல்கள் அதிகரிப்பு
ஸ்ரீநகர்:
காஷ்மீரில் நடந்த பல்வேறு தாக்குதல்கள், குண்டுவெடிப்புகளில் 9 தீவிரவாதிகள், ஒரு ராணுவ வீரர் ஆகியோர் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டதீவிரவாதிகளில் அன்சருல் முஜாஹீதீன் தீவிரவாத அமைப்பின் கமாண்டரும் அடங்குவான்.
இது தவிர ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த 2 பெண் சுற்றுலாப் பயணிகள் உள்பட 13 பேர் காயமடைந்தனர்.
சனிக்கிழமை பிற்பகலில் ஹஸ்ரத்பல் புனித மையத்தின் அருகே உள்ள ஒரு கட்டடத்தின் மீது தீவிரவாதி ஒருவன் கிரனைட் குண்டைவீசினான். இந்த குண்டு ரோட்டில் விழுந்து வெடித்தது.
இதில் அங்கு நின்றிருந்த 2 ஹங்கேரி நாட்டு பெண்களும் மேலும் 2 பெண்களும் காயமடைந்தனர். இவர்கள் அனைவரும்மருத்துவனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். காயமடைந்த அந்த ஹங்கேரி நாட்டுப் பெண்களின் பெயர்கள், மரியா மற்றும் பகுனே.
பாரமுல்லா பகுதியில் வனப் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த ராணுவத்தினர் அங்கு பதுங்கியிருந்த பாகிஸ்தான் ஆதரவு 3தீவிரவாதிகளை சுட்டுக் கொன்றனர். அவர்களிடமிருந்து 3 ரைபிள்கள் கைப்பற்றப்பட்டன.
குப்வாரா மாவட்டம் மாக்னம் பகுதியில் ராணுவ வீரர்கள் நடத்திய தாக்குதலில் அன்சருல் முஜாஹீதீன் அமைப்பின் லோக்கல்கமாண்டர் பாபர் பாதர் சுட்டுக் கொல்லப்பட்டான. அவனிடமிருந்து ஏ.கே. 47 துப்பாக்கி, வயர்லெஸ், துப்பாக்கிக் குண்டுகள்கைப்பற்றப்பட்டன.
ரட்டிமிட்டி கிராமத்தில் ராணுவத்தினர் மீது துப்பாக்கியால் சுட்ட தீவிரவாதிகள் மீது ராணுவம் பதிலடித் தாக்குதல் நடத்தியது. இதில்5 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
இந்த சண்டையில் ராணுவ அதிகாரி உள்பட 3 பேர் காயமடைந்தனர். மருத்துவனையில் சேர்க்கப்பட்ட இவர்களில் ஒரு ராணுவ வீரர்சிகிச்சை பலனின்றி இறந்தார். இங்கு தீவிரவாதிகளிடம் இருந்து 2 ஏ.கே. 47 ரக துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டன.
தெற்கு காஷ்மீரில் ராணிபுரா அருகே காரில் சென்று கொண்டிருந்த சிறப்புப் போலீஸ் அதிகாரிகள், கான்ஸ்டெபிள், டிரைவர் மீதுதீவிரவாதிகள் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டனர். இதில் இந்த 4 பேரும் காயமடைந்தனர்.
மதனா பகுதியில் கண்ணி வெடி வெடித்துச் சிதறியதில் ஒரு ராணுவ அதிகாரி உள்பட 3 ராணுவத்தினர் காயமடைந்தனர். இதையடுத்து அந்தப்பகுதியை ராணுவம் சுற்றி வளைத்து தீவிரவாதிகளைத் தேடி வருகிறது.
மேலும் ராணுவத்தினர் ரோந்து சென்றபோது 2 தீவிரவாதிகளைப் பிடித்தனர். அவர்களிடமிருந்து 3 ராக்கெட்டுகள், 60 எம்.எம்.மார்ட்டர் குண்டுகள் ஐந்து, 7 ரைபிள் கிரனைட்கள், ஒரு ஏ.கே. 47 ரக துப்பாக்கி, 2 வயர்லெஸ் செட்களை பறிமுதல் செய்தனர்.
தீவிரவாதிகளின் அட்டூழியம் அதிகரித்து வருவதையடுத்து பல காஷ்மீரில் பல பகுதிகளிலும் ராணுவம் தீவிர சோதனையில்ஈடுபட்டுள்ளது.ஸ்ரீநகரில் உள்ள நதிபுரா, ஹரிசிங் ஹை ஸ்ட்ரீட், மகாராஜி பஜார், சராய் பாலா கோணிகான், பெசன்ட் பாக் ஆகிய பகுதிகளைராணுவம் சுற்றி வளைத்து சோதனைகளில் ஈடுபட்டுள்ளது.
இதையடுத்து ஒவ்வொரு வீட்டிலும் ராணுவம் சோதனையில் ஈடுபட்டது. வீட்டில் இருந்த ஆண்களை எல்லாம் அழைத்து வந்துராணுவத்துக்கு தகவல் தரும் நபர்கள் முன் நிற்க வைத்தனர். அவர்கள் சுட்டிக்காட்டிய 12 பேரை விசாரணைக்காக ராணுவம்அழைத்துச் சென்றுள்ளது.












Click it and Unblock the Notifications