ராஜ்குமார் கடத்தல்... தவிப்பில் ரஜினிகாந்த்
சென்னை:
சந்தன வீரப்பனால் கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்டு 13 நாட்கள் ஆகிவிட்டன.
இதனால் ஏக வருத்தத்தில் இருக்கிறார் ஏக வருத்தத்தில் இருக்கிறார் ரஜினிகாந்த்.
ரஜினியின் மிக நெருங்கிய நண்பர் ராஜ்குமார். கிட்டத்தட்ட தனகு கலையுலக வழிகாட்டியாகவே அவை வைத்திருக்கிறார் ரஜினிகாந்த்.தனது நண்பர் எப்படி இருக்கிறார், எவ்வளவு தூரம் தினமும் காட்டில் நடக்கிறார், இரவில் எப்படி தூங்குகிறார் என தவிப்புடன்இருக்கிறார் ரஜினிகாந்த்.
சென்னையில் இருக்கும் ரஜினி ராஜ்குமாருக்காக கடும் பிரார்த்தனையில் ஈடுபட்டு வருவதாகக் கூறுகிறார்கள்.
ரஜினியின் திரையுலக வாழ்க்கை அவரது நூறாவது படமான ராகவேந்திரருக்குப் பிறகு மிகவும் பிரகாசமடைந்தது. அதற்கு முன்பு வந்தஒவ்வொரு படமும் மிகச் சிறப்பாகவே பேசப்பட்டது என்றாலும் இன்னும்... இன்னும் சிறப்பான இடத்திற்குச் செல்ல வேண்டும் எனஅலை பாய்ந்து கொண்டிருந்தார் ரஜினி.
அந்த நிலையில் ஒரு நாள் ராஜ்குமாரை சந்தித்தார். அப்போது, உங்களுக்கு இன்னமும் மிக உய்ரந்த இடம் இருக்கிறது ரஜினி, ஏன்நிறைய யோசிக்கிறீர்கள்? ராகேவந்திரரை பிரார்த்தியுங்கள், எல்லாம் சிறப்பாக நடக்கும் என்று ரஜினியிடம் சொன்னார்ராஜ்குமார். மேலும் உங்களது 100வது படத்தில் ஸ்ரீராகவேந்திரராகவே நடித்தால் என்ன என்று கேட்டு அவ்வாறு நடிக்கவும்வற்புறுத்தினார்.
ரஜினியும் ஒப்புக் கொண்டு நடித்தும் முடித்தார். இதுவரை அதிரடி ஸ்டைல் என்று கலக்கிவிட்டு இப்போது, சாந்த சொரூபமாக நடித்தால்மக்கள் ஏற்றுக் கொள்வார்களா என்கிற தயக்கமும் ரஜினியிடம் இருந்தது. இதற்கெல்லாம் ராஜ்குமார் கொடுத்தநம்பிக்கையும்,உற்சாகமும் அதிகம்.
இறுதியில் இது பற்றி நாம் யோசிக்க என்ன இருக்கிறது, எல்லாம் அந்த ராகேவேந்திரர் செயல் என்று களத்தில் இறங்குங்கள்,தோல்வியே வராது என்று உற்சாகப்படுத்தினாராம் ராஜ்குமார்.
படமும் முடிந்தது. படு பயங்கர டென்ஷன் மூடில் காத்திருந்தார் ரஜினி. முதல் நாள், இரண்டாவது நாள் என்று தொடர்ந்து தியேட்டர்களில்கூட்டமில்லை. படம் டல்லடிக்கிறது என்று கேள்விப்பட்ட ரஜினி சோர்ந்தே போனாரம். அந்த நேரத்திலும் ராஜ்குமார்பேசினாராம்.
ஒன்றும் கெட்டுப் போகாது ரஜினி, இனனமும் காலம் இருக்கிறது. ஸ்ரீ ராகவேந்திரர் கைவிடமாட்டார் தொடர்ந்து பிரார்த்தனைசெய்யுங்கள், நன்றாக வேண்டிக் கொள்ளுங்கள், நானும் பிரார்த்தனை செய்கிறேன் என்று சொன்னாராம் ராஜ்குமார்.
அதன்பிறகு என்ன மாயமோ, சக்தியோ.. ஒரு மாதத்திற்குப் பிறகு லேட் பிக்கம் ஆகி படம் நூறு நாட்கள் ஓடியது. பலரையும்ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அதே சமயம் நன்றாக நடித்திருக்கிறீர்கள் ரஜினி. உங்களுக்கு ஒரு குறையும் வராது, இனி எல்லாம் வெற்றிதான. நானும் உங்களுக்காக பிரார்த்திப்பேன் என்று ரஜினியிடம் சொன்னாராம் ராஜ்குமார்.
நண்பர் ராஜ்குமார் கடத்தப்பட்டுவிட்டார் என்றவுடன், அவரை விடச் சொல்லுங்களஅ. நான் வேண்டுமானால், காட்டுக்குப்போகிறேன்... வீரப்பனிடம் பேசுகிறேன என்று தமிழக முதல்வர் கருணாநிதியிடம் ரஜினி சொல்ல, வேண்டாம் ரஜினி என்றுசூழநிலையை விளக்கி ரஜினியை சமாதானப்படுத்தினாராம் கருணநிதி.
வீரப்பனை சந்திக்க கோபால் காட்டுக்குள் செல்கிறார் என்றவுடன் உற்சாகமடைந்தவர் .. அதன் பிறகு ராஜ்குமார்வந்துவிட்டாரா, தோபால் என்ன சொலிகிறார் என்று பலமுறை தமிழக முதல்வரிடம் பேசியிருக்கிறார் ரஜினி. ரஜினியும்தூக்கமில்லாமல் தான் தவிக்கிறார்.
நேற்றுமாலை நக்கீரன் கோபாலை நேரடியாகவே சந்தித்தார் ரஜின. நக்கீரன் கோபாலுக்கு பாராட்டு தெரிவித்தவர்,எப்படியிருக்கிறார் ராஜ்குமார் .. அவர் உடல் நலம் எப்படி இருக்கிறது என்று தீவிரமாக விசாரித்திருக்கிறார் ரஜினி.
ராஜ்குமார் குழந்தை மாதிரி, மனதில் எதையும் வைத்துக் கொள்ளாத அருமையான நண்பர். அவரை எப்படியும் பத்திரமாக மீட்கவேண்டும். அதற்கு என்னால் ஆன எல்லா உதவிகளையும் செய்யத் தயாராக இருக்கிறேன என்றவர் கோபாலிடம் அவரது அடுத்தகட்ட நடவடிக்கை பற்றியும் விசாரித்திருக்கிறார்.
ரஜினிகாந்துக்கு பெங்களூர் தான் சொந்த ஊர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications