திருச்சியில் காவல் காத்தவர் கம்பி எண்ணுகிறார்
Subscribe to Oneindia Tamil
திருச்சி:
திருச்சியில் கஞ்சா வைத்திருந்த சிறை வார்டன் கைது செய்யப்பட்டார்.
திருச்சி மத்திய சிறையில் வார்டன் ஆக இருந்தவர் ஜெயகுமார். இவர் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் மத்தியசிறைக்கு வேலைக்கு சென்ற பொழுது 20 கிராம கஞ்சா வைத்து இருந்தார்.
ஜெயில் வாசலில் ஜெயக்குமாரை சோதனை செய்த உதவி ஜெயிலர் ஆனந்தன் இதைக் கண்டுபிடித்து, ஜெயில் உயர்அதிகாரியிடம் புகார் செய்தார்.
போலீசிலும் புகார் செய்யப்பட்டது.
இது குறித்து புதுக்கோட்டை, அத்தியாவசிய பொருட்கள் சட்ட கோர்ட்டில் வழக்குத் தொடரப்பட்டது. வழக்கைவிசாரித்த நீதிபதி ரத்தினவேல், ஜெயக்குமாருக்கு 6 மாதம் கடுங்காவல் தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும்விதித்து தீர்ப்பு கூறினார். வேலை செய்த திருச்சி மத்திய சிறையிலேயே இப்போது கம்பி எண்ணுகிறார்ஜெயக்குமார்.












Click it and Unblock the Notifications