For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழக தலைவர்களின் சுதந்திர தின வாழ்த்துக்கள்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

இந்தியாவின் 53 வது சுதந்திர தினத்தையொட்டி தமிழக ஆளுநர், முதல்வர் மற்றும் பிற அரசியல் கட்சித்தலைவர்கள் வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளனர்.

ஆளுநர் பாத்திமா பீவி:

53 வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வேளையில் நாட்டின் விடுதலைக்காகப் போராடி தியாகங்களைச் செய்ததன்னலமற்ற தியாகிகளுக்கு நமது அஞ்சலியைச் செலுத்துவோம்.

நாட்டின் இறையாண்மையையும், ஒற்றுமையையும் பேணி பாதுகாக்கவும் நாட்டின் முன்னேற்றத்துக்கு நம்மை மறுஅர்ப்பணம் செய்யவும் உறுதி எடுத்துக் கொள்வோம்.

முதல்வர் கருணாநிதி:

விடுதலை பெற்ற நமது நாடு பல்வேறு துறைகளிலும் உலகமே வியக்கும் வண்ணம் முன்னேற்றம் கண்டு வருகிறது.முன்னேற்றப் பாதையில் நாடும், தமிழகமும் தொடர்ந்து வீறுநடை போட்டிட நாட்டு மக்கள் அனைவரும் சாதி, மதவேறுபாடுகளை அகற்றி ஒற்றுமையோடு சகோதர உணர்வுடன் பாடுபட வேண்டும்.

த.மா.கா தலைவர் மூப்பனார்:

சுதந்திரத்தின் அருமை, பெருமைகளையும், சுதந்திரத்துக்காக தேசிய இயக்கத் தலைவர்கள் செய்ததியாகங்களையும் இன்றைய இளைய தலைமுறையினர் அறிந்திட வேண்டும்.

நமது நாட்டின் அடிப்படைக் கொள்கைகளையும், அரசியல் சட்டத்தின் அடிப்படை லட்சியங்களையும் கட்டிக்காப்பதற்கு எத்தகைய முயற்சிகள் செய்யப்பட்டாலும் அவற்றுக்கு 100 கோடி இந்திய மக்களும் அணிவகுத்துநிற்பார்கள் என்ற நம்பிக்கை எனக்குள்ளது.

அதன் அடிப்படையில் இந்தியாவில் இருக்கின்ற மதச்சார்பற்ற சக்திகள், ஜனநாயக சக்திகள், முற்போக்கு சக்திகள்தங்களுடைய பொறுப்பை உணர்ந்து மக்களுக்குத் தலைமை தாங்கி வழி காட்ட முன்வர வேண்டும்.

ஜனநாயக கட்டமைப்பை கட்டிக்காப்பது ஒன்றுதான் முக்கிய கொள்கையாகக் கருதி நாட்டில் உள்ள மதச்சார்பற்றசக்திகள் அனைத்தும் ஓரணியில் திரள வேண்டும்.

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஈ.வெ.கி.எஸ்.இளங்கோவன்:

நாட்டையே அச்சுறுத்தி வரும் தீவிரவாத சக்திகளை அறவே ஒடுக்க மத்திய, மாநில அரசுகள் உறுதியானமுடிவுகளை எடுக்க வேண்டும்.

அந்த நடவடிக்கைகள் மூலம் நாட்டு மக்கள் அனைவரும் உண்மையான சுதந்திரப் பூங்காற்றின் வாசனையைநுகரும் வாய்ப்பை உருவாக்கித் தர வேண்டும்.

ராஜீவ் காங்கிரஸ் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தி:

காஷ்மீர் தீவிரவாதிகளின் அச்சுறுத்தலுக்கு இடையே இந்த ஆண்டு சுதந்திர தின விழாவைக் கொண்டாடும்நிலையில் இருக்கிறோம். அண்டை நாடான பாகிஸ்தான் நமக்கு பெரிய சவாலாக இருக்கிறது.

பாகிஸ்தானின் சதியை முறியடிக்க இந்திய மக்கள் அனைவரும் கட்சி பேதங்களை மறந்து மத்திய அரசு எடுக்கும்நடவடிக்கைகளுக்கு துணை நிற்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் கிருபாநிதி, எம்.ஜி.ஆர் கழகத் தலைவர் ஆர்.எம்.வீரப்பன், எம்.ஜி.ஆர் அ.தி.மு.கபொதுச் செயலாளர் திருநாவுக்கரசு, வ.கம்யூனிஸ்ட் செயலர் ஆர்.நல்லகண்ணு, இ.கம்யூனிஸ்ட் செயலர்என்.சங்கரய்யா உள்ளிட்டோரும் சுதந்திர தின வாழ்த்துச் செய்திகளைத் தெரிவித்துள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X