வேலூரில் மனைவியின் உடம்பில் எந்த புருஷனும் பார்க்கக்கூடாத டாட்டூ.. அடுத்த நொடி கணவன் செய்த செயல்
வேலூர்: கணவன் பெயரை, காதலனின் பெயரை பச்சை குத்திக் கொள்வது என்பது ஆண்டு ஆண்டு காலமாகவே இருக்கிறது. அதேபோல் ஆண்களுமே, தனது காதலி, மனைவி பெயரை பச்சை குத்திக் கொள்வார்கள். இப்போது உடம்பில் பலர் கணவனின் புகைப்படம் மற்றும் காதலனின் புகைப்படத்தை டாட்டூவாக குத்துவது பேஷனாகி வருகிறது. வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே வேறு ஒருவரின் படம், பெயரை உடலில் 'டாட்டூ' குத்தியுள்ளார் மனைவி. இதனை பார்த்து கணவன் செய்த செயலால் சிறையில் கம்பி எண்ணி வருகிறார்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த எர்த்தாங்கல் அருகில் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவருடைய மகன் அஜித். இவருக்கு 32 வயது ஆகிறது. அந்த பகுதியில் ஆட்டோ டிரைவராக பணியாற்றி வருகிறார். ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் பலமநேர் டிரைவர் காலனி பகுதியைச் சேர்ந்த ராமனின் மகள் பராசக்திக்கு 28 வயது ஆகிறது.

இவர், குடியாத்தத்தை அடுத்த லிங்குன்றம் கிராமத்தில் உள்ள தனியார் 'ஷூ' கம்பெனியில் ஊழியராக வேலைப் பார்த்து வந்தார். குடியாத்தம் அருகில் உள்ள ஒரு கிராமத்தில் உறவினர் வீட்டில் தங்கி இருந்த போது, பராசக்திக்கும், அஜித்துக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. . இருவரும் 9 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு மகனும், 2 மகள்களும் உள்ளனர்.
இந்த நிலையில், மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்ட அஜித் அடிக்கடி தகராறு செய்து வந்தாராம். இதனால் கணவரிடம் கோபித்துக் கொண்டு சில மாதங்களுக்கு முன்பு பராசக்தி ஆந்திராவின் பலமநேரில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அஜித் தனது மாமியார் வீட்டுக்கு சென்று இனி தகராறில் ஈடுபட மாட்டேன் எனக் கூறி மனைவி பராசக்தியை தனது வீட்டுக்கு குடும்பம் நடத்த அழைத்து வந்துள்ளார்.
அப்போது மனைவியின் கையில் வேறு ஒரு ஆணின் படம் 'டாட்டூ' வரையப்பட்டு இருந்துள்ளது. மேலும், உடலில் சில இடங்களில் அந்த ஆணின் பெயரும் 'டாட்டூ' குத்தி இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அஜித்துக்கும், பராசக்திக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறில் முடிந்தது. அவர், பராசக்தியை சரமாரியாக தாக்கினாராம். இதையடுத்து அவர்களை உறவினர்களும், அக்கம் பக்கத்தினரும் சமரசம் செய்தனர்.
நேற்று முன்தினம் இரவு மீண்டும் இதுதொடர்பாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அப்போது அஜித், மனைவி பராசக்தியை சரமாரியாக தாக்கி உள்ளாராம். இதில் பலத்த காயம் ஏற்பட்டு மயங்கிய நிலையில் இருந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தொடர்ந்து மேல்சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக குடியாத்தம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து மனைவியை தாக்கிய ஆட்டோ டிரைவர் அஜித்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் குடியாத்தம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.














Click it and Unblock the Notifications