Katta kusthi 2 Day 1 Box Office: முதல் நாளே பாக்ஸ் ஆபீஸில் மாஸ் காட்டிய கட்டா குஸ்தி 2.. அதுவும் எவ்வளவு வசூல் தெரியுமா?
சென்னை: விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாகி உள்ள கட்டா குஸ்தி திரைப்படம் முதல் நாளிலேயே நல்ல தொடக்கத்தை பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. முதல் பாகம் ரசிகர்களிடம் பெற்ற வெற்றியால் இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகமாக இருந்த நிலையில் அந்த நம்பிக்கையை ஏமாற்றாத வகையில் முதல் நாள் வசூலும் ரசிகர்களின் வரவேற்பும் படக்குழுவுக்க உற்சாகத்தை கொடுத்துள்ளது.
2022-ல் வெளியான கட்டா குஸ்தி திரைபடத்தில் கணவன் மனைவி உறவை மையமாக கொண்ட திரைக்கதை, விஷ்ணு விஷால் ஐஸ்வர்யா லட்சுமி ஜோடியின் இயல்பான நடிப்பு ஆகியவற்றால் பெரிய வெற்றியை பெற்றது. அந்த வெற்றியை தொடர்ந்து அதே கூட்டணி மீண்டும் இணைந்து இருப்பதால் இரண்டாம் பாகம் மீது ரசிகர்களுக்கு பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.

படத்தின் பிளஸ்
இயக்குனர் செல்லா அய்யாவு இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் விஷ்ணு விஷால் ஐஸ்வர்யா லட்சுமி உடன் கருணாஸ், முனீஸ் காந்த், காளி வெங்கட், கருணாகரன் உள்ளிட்டோர் மீண்டும் இணைந்து இருக்கின்றனர். அதுமட்டுமல்லாமல் ரம்யா கிருஷ்ணன் மோக்ஷா மற்றும் குழந்தை நட்சத்திரம் ஸாரா ஆகியோரின் நடிப்பும் படத்திற்கு பெரிய போனஸ் தான். ஷான் ரோல்டரின் இசையும் குடும்ப சென்டிமென்ட் கொண்ட எமோஷனல் காட்சிகளும் திரைக்கதையை ரசிகர்களுடன் கனெக்ட்டாக வைத்திருக்கிறது.
விமர்சனங்கள்
படம் வெளியாகும் முன்பே பத்திரிக்கையாளர்களுக்கான சிறப்பு காட்சிகள் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதேபோல திரையரங்குகளில் வெளியான பிறகும் குடும்ப ரசிகர்கள் அதிக அளவில் படத்தை ரசித்து வருவதாக திரையரங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக பெண்கள் மற்றும் குடும்பமாக படம் பார்க்க வந்தவர்களிடமும் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருப்பது பட குழுவினருக்கு நம்பிக்கையே கொடுத்திருக்கிறது.

கட்டா குஸ்தி 2 வசூல் நிலவரம்
வசூலை பொருத்தவரை முதல் நாளில் சுமார் 2,100 க்கும் மேற்பட்ட காட்சிகள் திரையிடப்பட்ட நிலையில் ரூபாய் 2.55 கோடி அளவுக்கு வசூல் செய்து இருப்பதாக பாக்ஸ் ஆபீஸ் தகவல் வெளியாகியுள்ளது. இது விஷ்ணு விஷாலின் சமீபத்திய படங்களில் நல்ல ஓபனிங் வசூல்களில் ஒன்றாக இருக்கிறது. இதற்கிடையே சமூக வலைத்தளங்களிலும் கட்டா குஸ்தி குறித்து நல்ல கருத்துக்கள் தொடர்ந்து பதிவாகி வருகிறது.

ரசிகர்களின் பாராட்டு
குடும்பத்தோடு அமர்ந்து பார்க்கக்கூடிய படம், காமெடியும் எமோஷனல் சரியான அளவில் இருக்கிறது, விஷ்ணு விஷால் ஐஸ்வர்யா லட்சுமி ஜோடி மீண்டும் அசத்தியிருக்கிறது என்று பலரும் பாராட்டி வருகிறார்கள்.
மேலும், படத்தில் இடம்பெற்ற சில காட்சிகள் ரசிகர்களிடையே தனியாக விவாதத்தையும் கிளப்பியுள்ளன. குறிப்பாக விஜய் பாடல் இடம்பெறும் ஒரு காட்சி சமூக வலைதளங்களில் டிரெண்டாகி, அதைப் பற்றிய பல்வேறு கருத்துகள் பரவி வருகின்றன. அந்த விவாதமும் படத்திற்கு கூடுதல் கவனத்தை ஈர்த்துள்ளது. சனி, ஞாயிறு விடுமுறை நாட்கள் என்பதால் குடும்ப ரசிகர்களின் வருகை இன்னும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் முதல் வார இறுதிக்குள் படத்தின் வசூல் கணிசமாக உயர வாய்ப்புள்ளதாக திரையரங்கு வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றன.
முதல் பாகம் போலவே இரண்டாம் பாகமும் குடும்ப ரசிகர்களின் ஆதரவை தொடர்ந்து பெற்றால், 'கட்டா குஸ்தி 2' இந்த ஆண்டின் குறிப்பிடத்தக்க குடும்ப வெற்றி படங்களில் ஒன்றாக இடம்பிடிக்கும் என்ற நம்பிக்கை திரையுலகில் உருவாகியுள்ளது.














Click it and Unblock the Notifications