குறுக்குச்சால் ஓட்டாதீர்கள் .. கருணாநிதி
சென்னை:
வீரப்பன் கன்னட நடிகர் ராஜ்குமாரைக் கடத்தியுள்ளது தமிழர்களையும், கன்னடர்களையும் பாதிக்கக் கூடியவிஷயம்.எனவே இந்த விஷயத்தில் யாரும் "குறுக்குச் சால் ஓட்டி ராஜ்குமார் விடுதலையை யாரும் கெடுக்கவேண்டாம் என்று தமிழக முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா திங்கள்கிழமையன்று மாலை ராஜ்குமார் கடத்தல் தொடர்பாககாட்டமான அறிக்கை வெளியிட்டார். இந்த நிலையில், தமிழக முதல்வர் கருணாநிதி விடுத்துள்ள ஒருஅறிக்கையில் கூறியுள்ளதாவது:
ராஜ்குமாரை, சந்தனக்கடத்தல் வீரப்பன் கடத்தியுள்ளது அவர்கள் இருவர் மட்டுமே சம்பந்தப்பட்ட பிரச்சனைகிடையாது. இது லட்சக்கணக்கான தமிழ் பேசும் மக்களையும், கன்னடம் பேசும் மக்களையும் பாதிக்கக்கூடியவிஷயமாகும்.
1991-ம் ஆண்டு ஏற்பட்ட கலவரத்தையும் அதனால் ஏற்பட்ட பாதிப்பையும் யாரும் மறக்க முடியாது. ராஜ்குமார்விடுதலை செய்யப்பட இருக்கும் நேரத்தில் அதை தடை செய்யும் விதமாக யாரும் செயல் பட வேண்டாம் என்றுகூறியுள்ளார்.
ஜெ.புகாருக்கு கோபால் மறுப்பு:
இதற்கிடையே,ஜெயலலிதா அறிக்கைக்கு நக்கீரன் கோபால் பதில் தெரிவித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.அதில், வீரப்பனைச் சுட்டுத் தள்ள வேண்டும் என்று கூறி வீரப்பனுக்குக் கோபம் உண்டாக்கி நடிகர் ராஜ்குமார்விடுதலையைத் தடுத்த நிறுத்த வேண்டும். அதன் மூலம் தமிழக, கர்நாடக அரசுக்கு கெட்ட பெயரை உருவாக்கவேண்டும்.
கர்நாடகத்தில் உள்ள தமிழ் மக்களை வன்முறைகளுக்கு ஆளாக்கி அதன் மூலம் சட்டம்-ஒழுங்கு பிரச்சனையைஏற்படுத்த வேண்டும் என்கிற விஷம புத்தியும், நச்சு நினைப்பும், நயவஞ்சகத் திட்டமும் ஜெயலலிதாவின்அறிக்கையில் இருப்பதைக் கண்டு வருத்தப்படுகிறேன்.
முன்பு 9 பேரைக் கடத்திய போது பொதுமன்னிப்புக் கோரினான் வீரப்பன். சரணடையத் தயார் ஆனான்.அப்போதும் இப்படித்தான் சகட்டு மேனிக்கு வீரப்பனையும், அரசையும் தாக்கி அறிக்கை வெளியிட்டார்ஜெயலலிதா. அந்த அறிக்கையால் வீரப்பன் தனது முடிவை மாற்றிக்கொண்டு, சரணடைய மறுத்து விட்டான்.
ஜெயலலிதா முதல்வராக இருந்த போது டிஎஸ்பி.சிதம்பரநாதன் மற்றும் மூன்று பேரைக் கடத்தினான் வீரப்பன்.அப்போது, மூன்று கோடி ரூபாயுடன் ஒரு போலீஸ் அதிகாரியை அனுப்பினால் தான் கடத்தப்பட்டவர்களைவிடுதலை செய்வேன் என்றான். அப்போது யாரும் காட்டுக்குச் சென்று வீரப்பனை சுடவில்லை.
என் மீது கர்நாடக அரசு போட்ட வழக்குகளை வாபஸ் பெறும்படி நான் கூறியதாகவும், கர்நாடக அரசு உடனடியாகவழக்குகளை வாபஸ் பெற்றுவிட்டதாகவும் கூறுவது பொய்.
டாக்டர் ராஜ்குமார் விடுதலை தள்ளிப் போனாலோ அல்லது அதன் எதிரொலியாக கர்நாடகத்தில் விரும்பத் தகாதஅசம்பாவிதச் சம்பவங்கள் நடந்தாலோ அதற்கு முழுக்க முழுக்க ஜெயலலிதாதான் காரணம் என்று அறிக்கைவெளியிட்டுள்ளார் கோபால்.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!