பெஞ்சமினுக்கு வந்த பேராசை
சென்னை:
தமிழக அரசு லாட்டரியில் தனக்கு ரூ. 90 லட்சம் முதல் பரிசு கிடைத்துள்ளதாக போலிலாட்டரி டிக்கெட்டை சமர்ப்பித்த கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த பெஞ்சமின்சென்னை நகர குற்றப் பிரிவு சிறப்புப் படை போலீஸார் கைது செய்தனர்.
இதுகுறித்து நகர போலீஸ் கமிஷனர் காளிமுத்து வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழக லாட்டரி கமிஷனருக்கு இரண்டு லாட்டரி டிக்கெட்டுகள் வந்துள்ளன. ஒருவர்பாண்டிச்சேரியைச் சேர்ந்தவர். மற்றவர் கன்னியாகுமரி மாவட்டம் வில்லுக்குறி நகரைச்சேர்ந்த பெஞ்சமின்.
இருவரும் தங்களுக்குத்தான் அரசு லாட்டரியில் முதல் பரிசு ரூ. 90 லட்சம்விழுந்திருப்பதாக கூறினர். இதில் பெஞ்சமின் தனது டிக்கெட்டை கனரா வங்கி மூலம்அனுப்பியிருந்தார்.
இதுகுறித்து குற்றப் பிரிவு தனிப்படை போலீஸார் விசாரணை நடத்தினர்.விசாரணையில், பெஞ்சமின் அனுப்பிய லாட்டரி டிக்கெட்டில் முறைகேடுசெய்யப்பட்டிருந்தது தெரிய வந்தது. லாட்டரி டிக்கெட்டின் எண்ணை பெஞ்சமின்மாற்றியிருந்ததும் தெரிய வந்தது.
இதையடுத்து பெஞ்சமினை அவரது ஊரில் வைத்து போலீஸார் கைது செய்தனர்.பின்னர் அவர் சென்னை கொண்டு வரப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார்.அவரை 15 நாள் போலீஸ் காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications