For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மனம் எப்படியோ அப்படித்தான் வாழ்க்கையும்...

By Staff
Google Oneindia Tamil News

கோவை:

பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறில் உலக அமைதி தின விழாவும், வேதாத்திரி மகரிஷியின் 90 வது பிறந்தநாள் விழாவும் நடந்தது.

இந்த விழாவில் உலக சமுதாய சேவா சங்கத்தின் தலைவர் மயிலானந்தன் வரவேற்று பேசியதாவது:

கடந்த 1958ம் ஆண்டு உலக சமுதாய சேவா சங்கம் தொடங்கப்பட்டு இதுவரை சிறப்புடன் செயல்பட்டு வருகிறது.மனிதன் என்பதற்கு என்ன பொருள் என ஆராய்ந்தால், மனதை உடையவன் என்பதால் மனிதன் எனக் கூறலாம்.

மனம் எப்படி இருக்கிறதோ அதைப் போன்று தான் வாழ்க்கை. மனம் சோர்வடைந்து, சிந்தனையற்று இருந்தால்,வாழ்க்கையும் சோகமாகி விடும். மனம் ஊக்கமுடையதாக, சுறு சுறுப்பாக செயல்படக் கூடியதாக இருக்குமானால்,வாழ்க்கையில் முன்னேற்றம் உற்சாகம் இருக்கும்.

இத்தகைய மனதைப் பண்படுத்த யாரும் இதுவரைக் கற்றுக் கொடுக்கவில்லை. ஆனால் இந்த மனதை வளப்படுத்தி,வாழ்க்கையை ஒளி பெறச் செய்ய வோதத்திரி மகரிஷி, மனவளக் கலை மன்றம் எனத் துவங்கி நடத்தி வருகிறார்.

இதன் மூலம் உலகம் முழுவதிலும் மனவளக் கலை பயின்று வருவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகிவருகிறது. தமிழகத்தில் மட்டும் 150 தியான மையங்கள் செயல்பட்டு வருகிறது. கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 35ஆயிரம் பேருக்கு தியானம் கற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது. 57 ஆயிரம் பேர் காயகல்பம் என்ற உடல் பயிற்சியைமுறையாகப் பயின்றுள்ளனர்.

தவ நிலையின் முக்கிய அம்சமாக 12 ஆயிரம் பேர் இறைஞானம் என்ற உணர்வை அறிந்துள்ளனர் என்றார்.

விழாவில் அழகர் ராமநுஜம் எழுதிய தத்துவ ஞானி வோதத்திரி மகரிஷியின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தைதேசிய மனித உரிமைக் கமிஷன் தலைவர் கார்த்திகேயன் வெளியிட, பாரதிய வித்யா பவன் தலைவர்கிருஷ்ணராஜ் வானவராயர் பெற்றுக் கொண்டார்.

பின்னர் கார்த்திகேயன் பேசுகையில், மகரிஷியின் தத்துவங்கள் அறிவியல் சார்ந்த விளக்கங்களைக்கொண்டுள்ளது. இதனை எல்லோரும் புரிந்து கொள்ளும் விதத்தில் அழகாக சொல்லியிருக்கிறார் என்றார்.

வானவராயர் பேசுகையில், இந்தியக் கலாச்சாரச் சீர்குலைவைத் தடுக்க அகத்தை ஆய்வு செய்வது மிகவும்அவசியம். தற்போது நம்முடைய கவலைகள் எல்லாம் நாட்டைப் பற்றியதாகத்தான் இருக்கும்.

இந்த நூற்றாண்டில் நாம் சந்திக்க வேண்டிய சவால்கள் ஏராளமாக இருக்கிறது. ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திரத்தினத்தைக் கொண்டாடுகிறோம். சுதந்திரமாகக் கொண்டாட வேண்டிய இந்த சுதந்திர தினத்தைக் கொண்டாட நாம்ராணுவத்தை அழைக்க வேண்டிய அவல நிலையில் உள்ளோம்.

இந்திய அரசியலில் நிலை இல்லை. கலாச்சாரத்தில் சீர்குலைவு ஏற்பட்டு வருகிறது. சமுதாயத்தில் குழப்பமானசூழ்நிலை நிலவி வருகிறது. இந்தியா முன்னேறிக் கொண்டிருக்கிறது என்று தான் எல்லோரும் சொல்லிக்கொண்டுள்ளனர்.

தொழில்நுட்பத்தில் முன்னேறலாம். ஏற்றுமதியில் முன்னேறலாம், ஆனால், அதிக மக்கள் தொகைகொண்டிருந்தாலும், மனித வளத்தில் நாம் மேம்பாடு அடையவில்லை. மனித வளத்தை மேம்படுத்த தனி மனிதவளம் மேம்பாடு அடைய வேண்டும். அதற்கு மன வளம் அவசியம்.

இந்தியாவிற்கென்று ஒரு லட்சியம் இருந்தது. சேவையும் தியாகம் தான் நமது நாட்டின் அடிப்படையாக இருந்தது.ஆனால், இப்போது சேவை மனப்பான்மையும் மறைந்து தியாகம் இல்லாமல் போய் விட்டது.

மெய்ஞ்ஞானத்தையும் விஞ்ஞானத்தையும் இணைக்கும் வோதாத்திரியம், அவசியம் நமது நாட்டிற்கு தேவைஎன்றார்.

விழாவில் சக்தி நிறுவனங்களின் தலைவர் தொழிலதிபர் மகாலிங்கம் சிறப்புரையாற்றினார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X