கடலில் மூழ்கிய நீர்மூழ்கிக் கப்பலை மீட்க போராடுகிறது ரஷ்யா

Subscribe to Oneindia Tamil

மர்மான்ஸ்க் (ரஷ்யா):

நடுக்கடலில் விபத்துக்குள்ளாகி ஆழ்கடலில் மூழ்கியுள்ள ரஷிய அணு நீர்மூழ்கிக் கப்பலில் உள்ள 130 ஊழியர்களைக் காப்பாற்றுவதற்காக,கடற்படைக் கப்பல்கள் மூன்றாவது முறையாக புதன்கிழமை காலை மீட்புப் பணியைத் துவங்கியுள்ளன.

திங்கள்கிழமை ரஷிய கடற்படைக்குச் சொந்தமான அணு நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று பெரண்ட் கடல் பகுதியில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தது. அப்போதுதிடீரென்று நீர்மூழ்கிக் கப்பலில் கோளாறு ஏற்பட்டதால் நடுக்கடலில் சிக்கிக்கொண்டது.

கப்பலில் அதிகாரிகள் உள்பட 130 பேர் உள்ளனர். கப்பலில் ரேடியோ தொடர்பும் முழுவதும் அறுந்து விட்டது. இதனால் கப்பலில் சிக்கியுள்ளவர்கள்கடற்படையைத் தொடர்பு கொள்வதும் இயலாத காரியமாகி விட்டது.

இவர்களை மீட்பதற்காக ரஷிய கடற்படை கப்பல்கள் கடந்த இரண்டு நாட்களாக கடலுக்குள் சென்று போராடின. ஆனால் பெரண்ட் பகுதியில் கடல்அலைகள் வேகமாக இருப்பதால் மீட்புக் கப்பல்களால் அங்கு செல்ல முடியவில்லை. இதனால் இரண்டு முறை கடலுக்குள் சென்றும் தோல்வியேகிடைத்தது.

இந்த நிலையில், மூன்றாவது முறையாக புதன்கிழமை காலை ரஷிய கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பலை மீட்கும் முயற்சியில் இறங்கின. பெரண்ட்கடல்பகுதியில் மோசமான வானிலையும், போதுமான வெளிச்சமும் இல்லாமல் இருப்பதால் இந்த முறையும் நீர்மூழ்கிக் கப்பலைக் கண்டு பிடிக்க முடியுமாஎன்பது சந்தேகமே. இந்த முறை கடலுக்குச் சென்றுள்ள கப்பல்கள் மூலம், ஒரே நேரத்தில் 15 பேரை மீட்க முடியும்.

ரஷ்ய கடற்படை அதிகாரி விளாடிமிர் கூறுகையில், கடலுக்குச் சென்றுள்ள மீட்புக் கப்பல்களால் நீர்மூழ்கிக் கப்பலில் சிக்கியுள்ள வீரர்களைக் காப்பாற்றமுடியவில்லையென்றால், 400 டன் அதிக எடையுள்ள இரண்டு தட்டையான மெட்டல் கப்பல்கள் மூலமாக மொத்த கப்பலையே அங்கிருந்து தூக்கத்திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.

நீர்மூழ்கிக் கப்பலில் 48 மணி நேரத்திற்கு தேவையான ஆக்ஸிஜன் மட்டுமே இருப்பு உள்ளது. இதனால் அதில் சிக்கியுள்ள 130 வீரர்களின் உயிருக்கும்ஆபத்து ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே, நீர்மூழ்கிக் கப்பலில் மூழ்கியுள்ளவர்களைக் காப்பாற்றுவதற்காக நேடோ நாடுகளின் கடற்படை உதவியை நாட ரஷ்யாதிட்டமிட்டுள்ளது. அதற்காக ரஷிய கடற்படை அதிகாரிகள் நேடோ தலைமையகம் உள்ள பிரஸல்ஸ்ஸூக்கு விரைந்துள்ளனர்.

நீர்மூழ்கிக் கப்பலையும், அதிலுள்ள வீரர்களையும் காப்பாற்றுவதற்கு முன்வந்த அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தின் உதவியை ஏற்கனவே ரஷ்யாநிராகரித்து விட்டது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+