கலைஞர் உருக்கம் ... கண்ணீரில் வைகோ
சென்னை:
நான் கண்மூடும் வரை என்னிடம் இருந்து வைகோவை தட்டிப்பறிக்க முடியாது என்றுமுதல்வர் கருணாநிதி பேசிய உருக்கமான பேச்சைக் கேட்டு, மேடையிலேயே கண்ணிர்விட்டு அழுதார் வைகோ.
சென்னையில் நடந்த ரெட்டைமலை சீனிவாசன் நினைவு தபால் தலை வெளியீட்டுவிழாவில் இந்த உருக்கமான சம்பவம் நடந்தது.
தபால் தலையை வெளியிட்டு முதல்வர் கருணாநிதி பேசினார். அவர் பேசுகையில்,தாழ்த்தப்பட்ட மக்களுக்காக போராடிய ரெட்டைமலை சீனிவாசன் தபால் தலைவெளியிடுவதற்காக வைகோ முயற்சி செய்ததாக கூறினார்கள்.
உண்மைதான். தம்பி முயற்சி செய்து பெற்ற தபால் தலையை நான்வெளியிட்டுள்ளேன். இதில் வியப்பு ஒன்றுமில்லை. தம்பி எடுத்த முயற்சியைகைவிடாமல் நிறைவேற்றுவார்.
அவர் இங்கிருந்தாலும் சரி அல்லது வேறு இடத்தில் இருந்தாலும் சரி. எடுத்தகாரியத்தை சரியாகச் செய்யும் திறமை பெற்றவர். இதை சொல்வதற்கு எனக்கு உரிமைஉண்டு.
இவரை என்னிடமிருந்து பறிக்க முடியாது. நான் கண் மூடும் வரை என்னிடம் இருந்துஅவரை தட்டிப் பறிக்க முடியாது என்று மிகவும் உணர்ச்சிவசப்பட்டு பேசினார்.
அதைக் கேட்டுக் கொண்டிருந்த ம.தி.மு.க. தலைவர் வைகோ மேடையிலேயேகண்ணீர் விட்டு அழுதார்.
பேசிமுடிந்து முதல்வர் நாற்காலிக்கு திரும்பியதும், அவரது கையை இறுக்கமாகபிடித்துக் கொண்டு கண்ணீர் சிந்தினார் வைகோ.
இரு தலைவர்களும் இப்படி உணர்ச்சிவசப்பட்டதைப் பார்த்து பார்வையாளர்களும்உணர்ச்சிவசப்பட்டனர்.












Click it and Unblock the Notifications