18 ம் தேதி வீரப்பனிடம் தமிழ் தீவிரவாதிகள் ஒப்படைப்பு?
சென்னை:
சந்தனக் கடத்தல் வீரப்பன் விடுவிக்கக் கோரிய 5 தமிழ் தீவிரவாதிகள் புதன்கிழமை விடுதலை செய்யப்படலாம் என்று தெரிகிறது.
ராஜ்குமாரை கடத்திய வீரப்பன், விதித்துள்ள நிபந்தனைகளில் முக்கியமானது 5 தமிழ்த்தீவிரவாதிகளை விடுதலை செய்யவேண்டும் என்பது.
இந்த 5 தீவிரவாதிகளில், சத்யமூர்த்தி, மணிகண்டன், முத்துக்குமார் ஆகிய மூவரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மூவரும்ஈரோடுமாவட்டம் அந்தியூர் அருகேயுள்ள வெள்ளித்திருப்பூர் காவல் நிலையம் சூறையாடப்பட்ட சம்பவத்தில் தொடர்புடையவர்கள்.
இந்த வழக்கு தவிர, புதுக்கோட்டை, சத்யமங்கலம் பகுதிகளில் மேலும் பல கொள்ளை வழக்குகளும் இவர்கள் மீது இருந்தது. இவர்கள் மீது தேசியபாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது. பவானி மாஜிஸ்டிரேட் கோட்டில் வழக்கு நடந்து வருகிறது.
விசாரணைக்காக, 15 நாட்களுக்கு ஒரு முறை 3 பேரும் பவானி கோர்டில் ஆஜர்படுத்தப்பட்டு வருகின்றனர். திங்கள்கிழமை இவர்கள் மூவரும் பவானிகோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். இவர்களுக்கு மேலும் 15 நாட்கள் காவல் நீடிப்பு செய்து நீதிபதி கிருஷ்ணன் உத்திரவிட்டார்.
அதைத் தொடர்ந்து, பலத்த பாதுகாப்புடன் திருச்சி மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இந்த நிலையில், சந்தன கடத்தல் வீரப்பனின் நிபந்தனையை ஏற்று தமிழ் தீவிரவாதிகள் 5 பேரையும் ஜாமீனில் விடுதலை செய்ய தமிழக அரசு முடிவுசெய்துள்ளது. அவர்களில் 4 பேர் மீதான தேசிய பாதுகாப்பு சட்டத்தை வாபஸ் பெற தமிழக அரசு சிறப்பு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இவர்களைப் போலவே, சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள, பொன்னிவளவன் தேசியபாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டதை விலக்கிக்கொள்ளப்பட்டது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் செவ்வாய்க்கிழமைவெளியானது.
பொன்னிவளவன் புதன் கிழமை சேலம் கோர்டில் ஆஜர் செய்யப்பட்டு விடுதலை செய்யப்படுவார் என்று தெரிகிறது.
மற்றொரு தீவிரவாதியான, வெங்கடேசனும் புதன்கிழமை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு விடுதலை செய்யப்படலாம் என்று தெரிகிறது.
தமிழக அரசு விடுதலை செய்யும் இந்த ஐந்து பேரையும் வெள்ளிக்கிழமை நக்கீரன் கோபால் காட்டிற்கு அழைத்துச் சென்று வீரப்பனிடம் ஒப்படைப்பார்என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications