இந்திய கிரிக்கெட் வாரிய பொருளாளரிடம் சிபிஐ விசாரணை

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

மேட்ச் பிக்ஸிங் குற்றச்சாட்டு தொடர்பாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய பொருளாளர் கிஷோர் ருங்தாவிடம் சிபிஐ அதிகாரிகள்வியாழக்கிழமை விசாரணை நடத்தினர்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் மற்றம் இந்நாள் வீரர்கள் மற்றும் இந்திய கிரிக்கெட் க்டடுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கிரிக்கெட்சூதாட்டத்தில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இவ் வழக்கு தொடர்பாக, சிபிஐ அலுவலகத்துக்கு வரும்படி கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய பொருளாளர் கிஷோர் ருங்தாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டது.அதன்படி, வியாழக்கிழமை காலை சிபிஐ அலுவலகத்துக்கு கிஷோர் ருங்தா வந்தார்.

அங்கு அவரிடம் இவ் வழக்குத் தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். பின்னர் அவர் தெரிவித்த தகவல்கள் குறித்து அவரிடம் சிலவிளக்கங்களையும் அவர்கள் கேட்டனர். சுமார் 50 நிமிடம் அவரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

ஏற்கெனவே கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தலைவர் ஏ.சி. முத்தையா, செயலர் லேலே உள்பட மற்றும் சில அதிகாரிகள் சிபிஐ அலுவலகத்துக்குநேரில் சென்று வாக்குமூலம் அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+