நாஞ்சில் மனோகரன் குடும்பத்துக்கு ரூ. 1 லட்சம் நிதி
சென்னை:
அண்மையில் காலமான வருவாய்த்துறை அமைச்சர் நாஞ்சில் மனோகரன் குடும்பத்தாருக்கு சட்டமன்றபேரவையால் வழங்கப்படும் குடும்பநல நிதியாக ரூ 1 லட்சத்திற்கான காசோலை, அவரது மகன் கிருஷ்ணாவிடம்வழங்கப்பட்டது.
முதல்வர் கருணாநிதி காசோலையை சபாநாயகர் பழனிவேல்ராஜன் முன்னிலையில் தலைமைச் செயலகத்தில்புதன்கிழமை கிருஷ்ணாவிடம் வழங்கினார்.
இதே போல், சமீபத்தில் காலமான அறந்தாங்கி எம்.எல்.ஏ. அன்பரசன் குடும்பத்திற்கு குடும்ப நல நிதியாக ரூ 1லட்சத்திற்கான காசோலை வழங்கப்பட்டது. காசோலையை முதல்வர் கருணாநிதி, அன்பரசனின் மனைவிசெல்லத்திடம், சபாநாயகர் பி.டி.ஆர்.பழனிவேல்ராஜன் தலைமையில் புதன்கிழமை வழங்கினார்.
நிகழ்ச்சியில், எம்.ஜி.ஆர்.அ.தி.மு.க.பொதுச் செயலாளர் திருநாவுக்கரசு, துணை சபாநாயகர் பரிதி இளம்வழுதிஅமைச்சர்கள் வீரபாண்டி ஆறுமுகம், சற்குணபாண்டியன் ஆகியோர் உடனிருந்தனர்.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!