For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பொறியியல் கல்லூரி கவுன்சிலிங் துவங்கியது

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தமிழக பொறியியல் கல்லூரிகளில் தகவல் தொழில் நுட்பம் சார்ந்த பிரிவுகளில்கூடுதலாக 5731 இடங்களை ஏற்படுத்தவும், புதிதாக 1910 எம்.சி.ஏ. இடங்களைஏற்படுத்தவும் அகில இந்திய தொழில் நுட்பக் கல்விக் குழு அனுமதியளித்துள்ளது.

இதையடுத்து பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான கவுன்சிலிங்சென்னையில் துவங்கியுள்ளது.

பொறியியல் கல்லூரிகளில் கம்ப்யூட்டர் அறிவியல் பிரிவில் 1964 இடங்களும்,தகவல் தொழில்நுட்ப பிரிவில் 1850 இடங்களும், எலக்ட்ரானிக்ஸ் மற்றும்கம்யூனிகேஷன் பிரிவில் 1917 இடங்களும் இந்த கல்வியாண்டில் ஏற்படுத்தப்படும்.

இந்த இடங்களையும் சேர்த்து தகவல் தொழில்நுட்பப் பிரிவில் தமிழகத்தில் 19ஆயிரத்து 352 இடங்கள் உள்ளன. இந்த கூடுதல் இடங்களையும் சேர்த்து தற்போதுஒற்றை சாளர முறையின் கீழ் 33 ஆயிரத்து 186 இடங்கள் உள்ளன.

இதில் அண்ணா பல்கலைக்கழகத்தில் 802 இடங்களும், அரசு பொறியியல்கல்லூரிகளில் 2461 இடங்களும், தனியார் கல்லூரிகளில் உள்ள குறைந்த கட்டணப்பிரிவின் கீழ் 16 ஆயிரத்து 183 இடங்களும், உயர் கட்டணப் பிரிவின் கீழ் 13 ஆயிரத்து740 இடங்களும் உள்ளன.

எம்.சி.ஏ. பட்டப்படிப்புக்காக தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளிலும், கலைமற்றும் அறிவியல் கல்லூரிகளிலும் தற்போது 5170 இடங்கள் உள்ளன.

இந்த கல்வி ஆண்டு முதல் எம்.சி.ஏ. பட்டப்படிப்பில் 1910 இடங்களை கூடுதலாகஏற்படுத்த அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு அனுமதியளித்துள்ளது.

கூடுதல் இடங்கள் கிடைத்தது பற்றி தமிழக உயர் கல்விச் செயலாளர் மணிவண்ணன்,தொழில் நுட்பக் கல்வி இயக்குனர் டாக்டர் ஞானம், அண்ணா பல்கலைக் கழகதுணைவேந்தர் டாக்டர் கலாநிதி ஆகியோர் கூறுகையில், அகில இந்தியதொழில்நுட்பக் கல்விக் குழுவிடம் கூடுதல் இடங்களை மிகக் குறுகிய காலத்தில் பெற்றமுதல் மாநிலம் தமிழகம் தான்.

இது தவிர மாலைக் கல்லூரி, பகுதிநேரக் கல்லூரிகளில் ஷிப்ட் முறையில் 10 ஆயிரம்கூடுதல் இடங்கள் உருவாக்கப்படும். இவை அடுத்த ஆண்டு தான் நிரப்பப்படும்என்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X