தடா வழக்கிலிருந்து தமிழ் தீவிரவாதி விடுவிப்பு
சென்னை:
சந்தனக் கடத்தல் வீரப்பன் விடுவிக்கக் கோரிய 5 தமிழ்த் தீவிரவாதிகளில் ஒருவரான ரேடியோ வெங்கடேசன் மீது போடப்பட்ட வழக்குகளிலிருந்துஅவரை தடா நீதிமன்றம் வியாழக்கிழமைவிடுவித்தது.
திருவாரூர், குடவாசல், மன்னார்குடி ஆகிய மூன்று இடங்களில் காங்கிரஸ் அலுவலகங்களில் நடந்த குண்டு வெடிப்புக்களில் தொடர்புடையவர் ரேடியோவெங்கடேசன். இவருக்கு வெள்ளித்திருப்பூர் காவல் நிலையத் தாக்குதல் சம்பவத்திலும் தொடர்பு உண்டு. இதுதொடர்பாக தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ்வெங்கடேசன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில், வெங்கடேசனை விடுவிப்பதற்காக அரசுத் தரப்பு வக்கீல் வி.மனோகரன் இரண்டு மனுக்களைத் தாக்கல் செய்தார். அந்த மனுக்களில்,வெங்கடேசனை விடுவிப்பது என திங்கள்கிழமை தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, தடா மற்றும் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ்வெங்கடேசன் மேல் போடப்பட்டுள்ள வழக்குகளை தடா நீதிமன்றம் பொதுநலன் கருதி வாபஸ் பெற வேண்டும். மேலும் அவரை விரைவில் விடுவிக்கவேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
மனுவை விசாரித்த நீதிபதி சின்னபாண்டி தடா வழக்குகளிலிருந்து ரேடியோ வெங்கடேசனை வியாழக்கிழமை விடுவித்தார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications