புனிதமடைந்தது" இந்திய கிரிக்கெட்

Subscribe to Oneindia Tamil

கே: வீரப்பன் வளர்ந்ததற்கு உண்மையான காரணம் என்ன?

ப: தொடர்ந்து ஆட்சி நடத்தி வருகிற இரு கழக அரசுகள்.

கே: போக்குவரத்து கழக ஊழல் வழக்கில், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கு 4 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை கிடைத்திருப்பது பற்றி...?

ப: அப்பீல் முடிகிற வரையில் எதுவும் நிச்சயமாக சொல்வதற்கில்லை.

கே: பயங்கரவாதத்தை ஒடுக்கும் சட்டம் மாநிலங்களில் தான் இருக்க வேண்டும் என்று கருணாநிதி கூறியிருப்பது பற்றி...?

ப: அப்போதுதானே தமிழ்த் தீவிரவாதி களுக்கு பொது மன்னிப்பு வழங்க முடியும்.

கே: தன்னைக் கொல்வதற்கு கம்யூனிஸ்டுகள் சதி செய்கின்றனர் என்று மம்தா பானர்ஜி கூறியுள்ளாரே?

ப: மேற்கு வங்கத்தில் நடக்கிற நிகழ்ச்சிகளைப் பார்க்கிற போது - அவருக்கு எதிராக கொலை நோக்கம் இல்லாவிட்டாலும், அவரைத் தாக்கிஅச்சுறுத்தும் எண்ணம் கம்யூனிஸ்ட் கட்சியில் சிலருக்காவது இருக்கும் என்றே தோன்றுகிறது. மம்தா பானர்ஜியின் குற்றச்சாட்டு, அசட்டைக்குரியதுஅல்ல.

கே: கார்கில் போரில் கூட வெற்றி பெறுகிறோம். ஆனால் காட்டுக்குள் இருக்கும் ஒரு தனி மனிதனை (வீரப்பனை) பிடிக்க முடியாமல்திணறுகிறோம். ஏன்?

ப: கார்கில் போரில் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் நமக்கு இருந்தது.

கே: மற்ற பத்ரிக்கைகளிலிருந்து துக்ளக் எந்த வகையில் வேறுபடுகிறது அல்லது துக்ளக்கின் தனிச் சிறப்பு என்ன?

ப: உங்கள் கேள்வியிலிருந்து நீங்கள் துக்ளக்கைப் படிப்பதில்லை என்பது புரிகிறது. துக்ளக்கைப் படிக்காதவர்கள் கூட, அப்பத்திரிக்கைக்கு கேள்விகளைஅனுப்புகிறார்கள் என்பது அதன் தனிச் சிறப்புகளில் ஒன்று.

கே: புத்த பிட்சுகள் மற்றும் எதிர்க் கட்சிகளின் கடும் எதிர்ப்பை மீறி, சந்திரிகாவால் தமிழர்களுக்குக் கூடுதல் அதிகாரத்தைத் தந்து விட முடியுமா?

ப: கடினம் தான். இலங்கையில் புத்த பிட்சுகளும், எதிர்க் கட்சிகளும் காட்டுகிற வரட்டுப் பிடிவாதமும், தீவிரவாதத்தை வளர்க்கத்தான் பயன்படும்.

தமிழர்களுக்கு சம உரிமை தருவதை எதிர்க்கிற சிங்களக் கூட்டங்கள் இருக்கிற வரையில், இலங்கையில் அமைதிக்கு வாய்ப்பில்லை. பிட்சுக்கள், எதிர்க்கட்சியினர் ஆகியோரின் மூர்க்கத்தனம், சிங்களர்களுக்கே கூட பெரும் தீங்கிழைக்கிறது.

அங்கு நிலைமை இப்படியே தொடர்ந்தால், பின்னர் தமிழர்களைக் குறை சொல்லிப் பயனிபல்லை. என்ற நிலை தோன்றி விடும். அதே சமயத்தில். தமிழ்அமைப்புகள் சந்திரிகாவின் முயற்சியை வரவேற்காமல் இருந்ததும் விவேகமற்ற அணுகுமுறைதான்.

கே: தமிழகத்தின் அடுத்த முதல்வராக வீரப்பனுக்கு வாய்ப்பிருக்கிறதா?

ப: வீரப்பன் முதல்வர் ஆகாவிட்டால் என்ன? ஆட்சியில் அமரப்போவது வீரப்பத்துவம். அதில் சந்தேகமில்லை. நமக்குக் குறையே இல்லை.

கே: சந்தன வீரப்பன், தனக்காக எந்த கோரிக்கையையும் எழுப்பவில்லையே?ஆச்சரியமாக இருக்கிறதே?

ப: வீர்ப்பனின் கோரிக்கைகள் அனைத்தும் வெளியிடப்பட்டு விடவில்லை - என்று நான் நினைக்கிறேன்.

கே:மத்தியப் பிரதேச சட்டசபையில் அறிமுகப்படுத்தியுள்ள முதலமைச்சரின் நேரம் பற்றி...?

ப: நல்ல வழிமுறை என்றே நினைக்கிறேன். தமிழகத்தில் கூட இதை முயன்று பார்க்கலாம்.

பிரிட்டிஷ். பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட இந்த யுக்தி,சட்டசபை உறுப்பினர்களுக்குக் கொஞ்சம் திருப்தியை ஏற்படுத்தக் கூடியது. முதல்வர்கள்கொஞ்சம் உஷாராக இருக்கவும் இது வழி செய்யக் கூடும்.

கே: வீரப்பன் பொது மன்னிப்போ, ரூபாய் 50 கோடியோ கேட்கவில்லை என்று கருணாநிதி தெரிவித்துள்ளாரே?

ப: என்னால் நம்ப முடியவில்லை.

கே: வீரப்பனுக்கு பொது மன்னிப்பு வழங்கினால், அதை எதிர்த்து வழக்குத் தொடர முடியுமா? தொடர்ந்தால் வெற்றி பெற முடியுமா?

ப: அரசே பொது மன்னிப்பு வழங்கி விட்டால்,அதை எதிர்த்து வழக்குத் தொடர முடியும், வெற்றியும் கிடைக்கும்.

கே: பெண்களில் தீவிரவாதிகள் அதிகம் இல்லை என்பது ஆறுதலான விஷயம்தானே?

ப: வாயைப் பொத்திக் கொண்டு பேசாமல் இருங்கள். 33 சதவிகித இட ஒதுக்கீடு கேட்டுவிடப் போகிறார்கள்.

கே:அயல்நாடுகளுக்கு அரசு தூதுவர்களை நியமிப்பது போல, சந்தனக் கடத்தல் வீரப்பனுக்கு நக்கீரன்கோபால் அவர்களை, அரசு தூதுவராக நியமித்தால்என்ன?

ப: சம அந்தஸ்தில் உள்ள அயல்நாட்டுக்கு தூதுவரை நியமிக்கலாம். ஆனால் வீரப்ப நா(கா)டு அப்படிப்பட்டது இல்லையே?

அதற்கு அடிமை நாடாகிய நாம், அதற்கு எப்படி தூதுவரை நியமிப்பது? கப்பம் கட்டும் நாடுகள் தூதுவரை நியமிக்கும் முறை வழக்கில் இல்லை.

கே: சந்தன வீரப்பனுக்கு அரசு பொதுமன்னிப்பு அளிக்கும் பட்சத்தில், ஊழல் வழக்குகளை எதிர் நோக்கியிருக்கும் அரசியல் தலைவர்களுக்கும் பொதுமன்னிப்பு வழங்கலாமே? அப்போதுதானே சமதர்மம் நிலவும்? இதற்கு என்ன சொல்கிறீர்கள்?

ப: வீரப்பன் பொது மக்களின் எதிரி - அதனால் அவனுக்கு பொதுமன்னிப்பு வழங்கலாம் ; வழக்கில் சிக்கியிருக்கிற ஊழல்வாதிகள்,ஆட்சியாளர்களின்எதிரிகள் - அதனால் அவர்கள் பொது மன்னிப்புக்கு உரிமை பெற்றவர்கள் அல்ல.

கே: வீரப்பன் விஷயத்தில் ஜெயலலிதா நிலை சரியா?

ப: கருணாநிதியின் நிலையை விட, மேல்.

கே: சந்தனக் கடத்தல் வீரப்பனுக்கு பொது மன்னிபபு வழங்குவதில் தவறில்லை - என்று, சம்பல் பள்ளத்தாக்கில் பல கொள்ளையர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கியதையும், பிணைக் கைதிகளின் விடுதலைக்காக தீவிரவாதிகளை விடுவித்ததையும் உதாரணம் காட்டுகிறாரே ரங்கராஜன்குமாரமங்கலம்?

ப: ஒரு தவறைச் செய்துவிட்டு, அதே தவறைஅடுத்த தவறுக்கு முன்னுதாரணமாகக் காட்டுகிற கலை - நாட்டுக்கு பயன் தரக்கூடியது அல்ல.

கே: கர்நாடகாவில் தமிழை இரண்டாவது மொழியாக அங்கீகரிக்க வேண்டும்; காவிரி நீரை தமிழகம் கேட்கும் அளவுக்கு கொடுக்க வேண்டும்;கர்நாடகத்தில் சிறை வைக்கப்பட்டிருக்கும் தடா கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் ... என்கிற சந்தன வீரப்பனின் கோரிக்கைகள் குறித்து...?

ப: இந்த மாதிரி கோரிக்கைகளை,மிரட்டல் மூலமும்,பிளாக் மெயில் முலமும் நிறைவேற்றிக் கொள்ளும் அளவுக்கு, நமது ஆட்சி முறை தாழ்ந்து போய்விடவில்லை.

இவை எல்லாம் சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் சாதிக்கப்படுவதுதான், இரு மாநில உறவுக்கும், தமிழர் நலனுக்கும் உகந்தது. ஆகையால்இம்மாதிரி கோரிக்கைகள் ஏற்கப்படக் கூடியவை அல்ல! என்று நேர்மைத் திறன் தமிழக அரசுக்கு இல்லாமற் போனது வருந்தத்தக்கது.

இவை வீரப்பனின் உண்மையான கோரிக்கைகள் அல்ல என்பதால் - தமிழக அரசு இவற்றை நிராகரித்திருந்தால் - அதனால் வீரப்பன்,ராஜ்குமாரை எதுவும் செய்திருக்க மாட்டான்.

இந்த கோரிக்கைகள் ஏற்கப்படுவதால் , தமிழர் பிளாக் மெயில் நடக்கிறது என்று நினைத்து கர்நாடகத்தில், தமிழர் மீதான வெறுப்புணர்வு வளர வழிபிறக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+