For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

புனிதமடைந்தது" இந்திய கிரிக்கெட்

By Staff
Google Oneindia Tamil News

இன்னமும் சொல்கிறேன், வீரப்பன் பணம் கேட்காமல் இருந்திருக்கப் போவதில்லை.பணம் கொடுக்கப்படாமலும் இருக்கப் போவதில்லை. அது யார் மூலமாகப் போகும்என்பது எனக்குத் தெரியாது.

போலீசார் மூலமாகக் கூட போகலாம். அல்லது, தகவல் திலகமாகிய வீரப்பன்,காட்டிலே எந்த இடத்தில் அந்தப் பணம் எப்படி வைக்கப்பட வேண்டும் என்றுகூறியிருக்லாம்; அதன்படியே கர்நாடக, தமிழக அரசுகள் செயல்பட்டு பணத்தைவைத்துவிட்டு வரலாம். அல்லது வீரப்பனுக்கு வேண்டியவர்கள் யாராவது வந்துபணத்தைப் பெற்றுச் செல்லலாம். பணம் கை மாறாமல் இருக்கப் போவதில்லை என்பதுமட்டும் நிச்சயம்.

ஆனால், கோபால் இந்தக் கேள்விக்கு பதில் கூறுகையில், எல்லாம் கற்பனை; நான்சொந்தச் செலவில் சென்றேன் என்று கூறினார். இவருக்கு பணம்கொடுக்கப்பட்டிருப்பதாக நான் கூறாத போது, சொந்தச் செலவு என்று அடித்துச்சொல்ல வேண்டிய அவசியம் இவருக்கு எப்படி எழுந்தது என்று எனக்குத்தெரியவில்லை.

வீரபாண்டியன் கூட நீங்கள் பணம் பெற்றதாக சோ சொல்கிறாரே? என்றுகேட்கவில்லை. ஆனால் வீரப்பனுக்கு பணம் போய்ச் சேர்ந்திருக்கும் என்று நான்கூறியதைக் கூட கோபாலால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை போலிருக்கிறது.

இது ஒருபுறமிருக்க, சோ காட்டுக்குச் செல்லட்டும் என்று கோபால் சவால்விட்டிருக்கிறார். இந்தச் சவால் எப்போது வருகிறது? சென்ற இதழிலேயே எச்சரிக்கைபகுதியில் ஒரு வாசகர் கேட்ட கேள்வியும், அதற்கு நான் அளித்த பதிலும் இதோஇருக்கின்றன.

கே: வாய் கிழியப் பேசுகிறீர்களே? வீரப்பனைச் சந்திக்க நீங்கள் தயாரா? துணிவுஇருக்கிறதா?

ப: எனக்கென்ன பயம்? வீரப்பனை தாராளமாகச் சந்திப்பேன்.எத்தனை முறைவேண்டுமானாலும் சந்திப்பேன். ஆர்.எம். வீரப்பனைச் சந்திப்பதில் எனக்கென்னதயக்கம்?

இப்படி நானே சொன்ன பிறகு, நீ போவாயா காட்டுக்கு என்று கேட்பதில்அர்த்தமில்லை. வீரப்பனை நன்றாக அறிந்திருக்கும் கோபாலே, வீரப்பன் யாரைச்சந்திக்க விரும்புகிறானோ, அவர்களுக்கு அவனே தகவல் அனுப்புவான்.எப்படியெல்லாம் வந்து சேர வேண்டும் என்ற வழிகளையெல்லாம் கூறி அனுப்புவான்.அதன்படி சென்றுதான் அவனைச் சந்திக்க முடியும் என்று சொல்லியிருக்கிறார்.

நான் வீரப்பனுக்கு வேண்டியவன் அல்லவே! நக்கீரன் கோபாலைப் போலவோ, சன்டி.வி.யைப் போலவோ நான், வீரப்பன் இமேஜை வளர்க்கப் பாடுபட்டவன் அல்லவே!அவர்கள் மீது வீரப்பனுக்கு இருக்கிற நம்பிக்கை,என் மீது அவனுக்கு எப்படி வரும்?

நான் போனால் அடுத்து போலீஸ்தான் வரவேண்டி இருக்கும் என்று வீரப்பனுக்குத்தெரியாதா என்ன? அப்படி இருக்க, நான் எப்படி சென்று வீரப்பனை சந்திக்க முடியும்?வேண்டுமானால் காட்டிற்குள் நடந்து விட்டு திரும்பி வரலாம் - அதாவது வீரப்பன்ஆட்கள் கையில் சிக்காமல் இருந்தால்! அப்படிப்பட்ட வெற்று காரியங்களைவீறாப்புக்காகக் கூட செய்யும் நோக்கம் எனக்குக் கிடையாது.

ஆகையால் கோபாலின் சவால் என்னால் ஏற்கத்தக்கது அல்ல. ஒரு விஷயம் -என்னதான் கோபால் வீரப்பனுக்கு நண்பராக இருந்தாலும் - சோ காட்டுக்குப்போகட்டும் என்று சொல்லி, வீரப்பனுக்கு அடுத்த பணயக் கைதியை ஏற்பாடு செய்துதருகிற அளவுக்கு அவர் போகலாமா?

இவையெல்லாம் ஒருபுறமிருக்க, வீரப்பன் நான்கு புதிய உத்திரவுகளைஅனுப்பியிருக்கிறான். அவனுடைய உத்திரவுகளில் எவற்றை இரு மாநில அரசுகள்,எந்த அளவுக்கு ஏற்றன என்பது நமக்கு உடனடியாகத் தெரியவரும் என நான்நம்பவில்லை.

இரு மாநில அரசுகளுக்கும் இந்த விவகாரத்தினால் ஏற்பட்டிருக்கிற தலைகுனிவுகொஞ்ச நஞ்சமல்ல. ராஜ்குமார் திரும்பிய பிறகாவது இரு மாநில அரசுகளுக்கும்கொஞ்சம் சொரணை வந்தால் நல்லது.

அடுத்த ஆள் கடத்தல் வரை காத்திராமல், உடனடியாக வீரப்பன் அட்டகாசத்தைமுடித்து வைக்க இரு மாநில அரசுகளும் முனைய வேண்டும்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X