மதுரையில் ரூ.2.6 கோடியில் எர்த் ஸ்டேஷன்
மதுரை:
மதுரையில் ரூ. 2.6 கோடி செலவில் செயற்கைக்கோள் தரைக் கட்டுப்பாட்டு மையம் (எர்த் ஸ்டேஷன்) அமைக்கப்படவுள்ளது.
இத் தகவலை சென்னையில் உள்ள சாப்ட்வேர் டெக்னாலஜி பார்க்ஸ் ஆஃப் இந்தியா இயக்குநர் ராஜலட்சுமி தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:
1600 சதுர அடி நிலப்பரப்பில் இச் செயற்கைக்கோள் தரைக் கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட உள்ளது. இதற்காக ஒரு ஏக்கர் நிலப்பரப்பைமதுரையில் உள்ள தியாகராஜர் பொறியியல் கல்லூரி வழங்கும்.
சுமார் ரூ. 2.6 கோடி செலவில் வரும் டிசம்பருக்குள் இம் மையம் உருவாக்கப்படும். இது தொடர்பான ஒப்பந்தம் சாப்ட்வேர் டெக்னாலஜி பார்க்ஸ் ஆஃப்இந்தியாவுக்கும் தியாகராஜர் பொறியியல் கல்லூரிக்கும் இடையே வெள்ளிக்கிழமை கையெழுத்தானது.
இதே போல் மற்றொரு செயற்கைக்கோள் தரைக் கட்டுப்பாட்டு மையம் திருச்சியில் டிசம்பர் மாதத்துக்குள் நிறுவப்படும். சுமார் 1000 சதுர அடிபரப்பளவில் அமைய உள்ள இம் மையத்துக்கான நிலப்பரப்பு தொடர்பான ஒப்பந்தம் ஏற்கெனவே கையெழுத்தாகிவிட்டது.
தமிழகத்தின் இரண்டாவது செயற்கைக்கோள் தரைக் கட்டுப்பாட்டு மையம் சென்னையில் அடுத்த சில வாரங்களில் செயல்படத் துவங்கும். தமிழகத்தின் முதல்செயற்கைக்கோள் தரைக்கட்டுப்பாட்டு மையம் கோயம்புத்தூரில் 1999-ம் ஆண்டு நிறுவப்பட்டது என்றார் ராஜலட்சுமி.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications