5 தமிழ்த் தீவிரவாதிகளை விடுவிப்பதில் இழுபறி நீடிப்பு
சென்னை:
வீரப்பன் விதித்துள்ள கெடு முடிவடையும் நிலையில், அவனது கோரிக்கைப்படி 5 தமிழ் தீவிரவாதிகளைவிடுவிப்பதில் ஏற்பட்டுள்ள இழுபறி நீடிக்கிறது.
இதற்கிடையே வீரப்பனை சந்திப்பதற்காக இரண்டாவது முறையாக காட்டுக்குச் சென்றுள்ள அரசுத் தூதர் நக்கீரன்கோபாலிடமிருந்து எந்த தகவலும் வரவில்லை.
கன்னட நடிகர் ராஜ்குமாரையும், அவரது உறவினர்கள் மூவரையும் சந்தன கடத்தல் வீரப்பன் காட்டிற்குக் கடத்திச்சென்று 21 நாட்கள் ஆகி விட்டன. வீரப்பன் பிடியில் இருந்து ராஜ்குமார் உள்ளிட்ட நால்வரை பத்திரமாக மீட்கும்முயற்சிகளில் கர்நாடக, தமிழக அரசுகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
இம்முயற்சியின் காரணமாக நக்கீரன் கோபால், அரசு தூதராக காட்டிற்குச் சென்று வீரப்பனை சந்தித்துப்பேச்சுவார்த்தை நடத்தி திரும்பினார். தமிழகத்தில் 5 தமிழ்த் தீவிரவாதிகள், கர்நாடகாவில் 51 தடா கைதிகளைவிடுவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல கோரிக்கைகளை வீரப்பன் விதித்தான்.
அவற்றில் கைதிகள் விடுதலையை தவிர மற்ற கோரிக்கைகள் அனைத்திற்கும் இரு மாநில அரசுகளும் உரியபதிலை அளித்து விட்டன. அதை வீரப்பனும் ஏற்றுக் கொண்டார்.
ஆனால், முக்கிய நிபந்தனையான தீவிரவாதிகள் மற்றும் தடா கைதிகள் விடுதலையில் தான் தாமதம் ஏற்பட்டுவருகிறது. தமிழகச் சிறைகளில் உள்ள தமிழர் விடுதலைப் படையை சேர்ந்த சத்தியமூர்த்தி, மணிகண்டன்,முத்துக்குமார், வெங்கடேசன், பொன்னிவளவன் ஆகிய 5 பேரையும் விடுவிக்க வேண்டும் என்பது தான்வீரப்பனின் நிபந்தனை.
இந்த ஐந்து பேர் மீதும் தேசிய பாதுகாப்புச் சட்டம், தடா உள்ளிட்ட 14 வழக்குகள் உள்ளன. இவற்றை வாபஸ்பெற்று அவர்களை அரசே விடுவிக்க வேண்டும் என்று வீரப்பனும், அவனது பின்னணியில் உள்ளநக்சலைட்டுகளும் வற்புறுத்தி வருகின்றனர்.
ஆனால், அவர்கள் மீதான தேசிய பாதுகாப்புச் சட்ட வழக்கு, தடா ஆகியவற்றை மட்டுமே அரசால் வாபஸ் பெறமுடியும். மற்ற வழக்குகள் தனித்தனியாக போடப்பட்டவை. உதாரணமாக மயிலாடுதுறை டி.வி. கோபுரத்திற்குகுண்டு வைத்த வழக்கு, மத்திய அரசால் தொடரப்பட்டது.
இப்படி தனித்தனி வழக்குகளாக இருப்பதாலும், அவற்றை அரசால் வாபஸ் பெற முடியாத நிலை இருப்பதாலும்,இந்த 5 பேரையும் சொந்த ஜாமீனில் நீதிமன்றத்தின் மூலம் விடுவிப்பதற்கு அரசு ஏற்பாடு செய்தது.
அதை தீவிரவாதிகள் ஏற்க மறுத்து விட்டனர். ஜாமீனில் விடுதலை செய்தால், வழக்குகள் அப்படியே தொடரும்என்பதால், அதற்கு உடன்பட தீவிரவாதிகள் மறுக்கின்றனர். எல்லா வழக்குகளையும் ரத்து செய்து விடுதலைசெய்யுங்கள் என்று சொல்கின்றனர்.
இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்டுள்ள சட்டச் சிக்கல்களால் வீரப்பன் நிபந்தனையை நிறைவேற்றுவதில்தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ராஜ்குமார் விடுதலையும் தள்ளிப் போய்க் கொண்டிருக்கிறது.
இதற்கிடையில் வீரப்பன் விதித்த கெடு முடிவதற்குள், அவனை சந்தித்துப் பேசுவதற்காக நக்கீரன் கோபால்காட்டுக்குள் சென்றுள்ளார். இரண்டு நாட்களாகியும் அவரிடம் இருந்து எந்த தகவலும் இல்லை. வீரப்பன்ஆட்களை அவர் சந்தித்து விட்டதாகவும், வீரப்பன் இருப்பிடத்திற்கு அவர் அழைத்துச் செல்லப்படுவதாகவும்கூறப்படுகிறது.
கோபாலின் பயணம் தடைப்பட்டதற்கு சத்தியமங்கலம் காட்டுப் பகுதியில் பெய்து வரும் கன மழையும் காரணம்என்றும், ஞாயிற்றுக்கிழமைக்குள் கோபாலிடமிருந்து தகவல் வரும் என்றும் தமிழக அரசு எதிர்பார்த்துக்கொண்டுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications