கண்ணா 2 லட்டு தின்ன ஆசையா.. துலாம் ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பேச்சில் கவனம்

Subscribe to Oneindia Tamil

ஆடி மாத ராசிபலன்: தமிழ் மாதத்தில் முக்கியமான ஆடி மாதம் சில நாட்களில் பிறக்கவுள்ளது. ஒவ்வொரு தமிழ் மாதத்திற்கு பின்னாலும் ஓர் அறிவியல் உள்ளது. இந்த ஆடி மாதத்தில் பல கிரக நிலைகளில் சில அதிசயங்கள் நிலவுகின்றன. இதன் மூலம் துலாம் ராசிக்கு கிடைக்கும் பலன்களை காணலாம்.

ஆடி மாதம் ஜூலை 17 ஆம் தேதியில் இருந்து, ஆகஸ்ட் மாதம் 16 ஆம் வரை இருக்கும். 12 வருடங்களுக்கு பிறகு சிவராஜயோகத்துடன் ஆடி மாதம் பிறக்கிறது. சூரியனும், குரு பகவானும் வீட்டில் இணைந்து உச்ச பலத்துடன் இருப்பதுதான் சிவராஜயோகம். இந்த மாதத்தில் சூரியன், புதன் குரு கடக ராசியில் பயணிக்கவுள்ளனர். சுக்கிரன் கன்னி வீட்டில் பயணிக்க போகிறார்.

aadi-month-zodiac-sign-thulam-rasi-peopl-will-get-huge-success-in-this-period

செவ்வாய் சுக்கிரன் வீட்டில் அமர்ந்துள்ளார். புதன் பகவான் வக்கிரமாக உள்ளார். ராகு, கேதுவின் தாக்கம் இந்த மாதம் இருக்கும். சுக்கிரன் ராகு சேர்க்கை உள்ளிட்ட நல்ல பலன்களை கொடுக்கும். ஆடி மாதத்தில் துலாம் ராசிக்கு என்ன பலன்கள் கிடைக்கும், வழிபட வேண்டிய தெய்வங்கள், பரிகாரம் குறித்து பார்க்கலாம்.

துலாம்

துலாம் ராசி மற்றும் கன்னி லக்னத்திற்கு குடும்பம், தொழில், உத்தியோகம், படிப்பு, வியாபாரம் தொடர்பான விஷயங்களில் வார்த்தைகளுக்கு மதிப்பு அதிகரிக்கும். சுபவிரயம் ஏற்படும். அடுத்தடுத்து முன்னேற்றங்கள் காணப்படும். ரத்த பந்த உறவுகளுக்கும், உங்களுக்கும் இருந்த பிரச்சனைகள் தீரும். நிறைய விஷயங்களில் முன்னேற்றம் காணப்படும். பெரிய அளவுக்கு அனுகூலம் ஏற்படும்.

பேச்சில் கவனம்

பெரிய முதலாளிகளை சந்திக்கக்கூடிய பாக்கியம் ஏற்படும். பூமி, வியாபாரம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் தைரியமாக முடிவெடுக்கலாம். செவ்வாயும், குருவும் வாக்கு ஸ்தானத்தில் இருப்பதால் பேச்சில் இனிமையை கடைப்பிடிப்பது நன்மையைத் தரும். ஏற்கனவே, நிலம், வீடு வாங்கி வைத்து பயன்படுத்தாமல், வாடகைக்கு விடாமல் இருந்த நிலைமைகள் எல்லாம் தீரும். சுபவிரயம் அதிகமாக ஏற்படும்.

யோகம்

பிடித்த பொருள்கள், ஆடைகள், ஆபரணங்கள், வண்டி, வாகனங்களை வாங்கி மகிழ்வீர்கள். தொழில் அற்புதமாக இருக்கும். தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு என எல்லா விஷயங்களிலும் யோகம் பெறும் நல்ல காலகட்டம். பதவி உயர்வு கிடைக்கவில்லை என்று கவலைப்பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு குட்நியூஸ் வந்து சேரும். வேற்று மொழி மனிதர்களால் பெரிய ஆதாயம் கிடைக்கும்.

பாதிப்புகள் நிவர்த்தி

கடல் கடந்து வியாபாரம், தொழில், உத்தியோகம் செய்பவர்களுக்கு விசா பிரச்சனைகள் நீங்கும். யோகமும், அனுகூலமும் ஏற்படும். பூமி சம்பந்தப்பட்ட விஷயங்களில் இருந்த பாதிப்புகள் நிவர்த்தியாகும். எதிர்பார்க்காத இடத்தில் இருந்து நல்ல செய்திகள் சேரும். ஆடி மாதம் உங்களுக்கு வலிமையை ஏற்படுத்தும். இதுவரை இருந்து வந்த தடைகள் எல்லாம் பரிபூரணமாக நீங்கும். தொட்டது துலங்கும்.

முன்னேற்றம்

8 இல் குரு இருப்பதால் மன அழுத்தம் இருக்கும். அதீத மன அழுத்தம் கொள்ளாமல் இருப்பது நல்லது. மற்றபடி எல்லாவிதமான ஏற்றங்களும் உங்களுக்கு ஏற்படும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் கிடைக்கும். ஹார்மோன் குறைபாடுகள், ரத்தத்தில் ஏற்படும் பாதிப்புகள், குறை ரத்த அழுத்தம், அதீத ரத்த அழுத்தம், சர்க்கரை, கொழுப்பு, தொற்று, சளி போன்ற பாதிப்புகள் வருவதற்கான வாய்ப்புள்ளதால் கவனமாக இருக்க வேண்டும்.

வழிபாடு

குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திடீர் அதிர்ஷ்டங்கள் ஏற்படும். முருகர் வழிபாடு சகலவித ஏற்றங்களையும் தரும். சுப்பிரமணிய புஜங்கம், சுப்பிரமணிய கவசம், சண்முக கவசத்தை தினந்தோறும் கேட்பது ஏற்றத்தைத் தரும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+