மதுரையில் 2 இடங்களில் சாலைமறியல் செய்த 80 திமுகவினர் கைது

Subscribe to Oneindia Tamil

மதுரை:

மதுரையில் இரு இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்ட திமுக தொண்டர்கள 80 பேர்கைது செய்யப்பட்டனர்.

கட்சித் தலைமையிடத்தில் தனக்கு சரியான மரியாதை கிடைக்கவில்லை என்றும்அதனால் திமுகவை விட்டு மட்டுமல்ல அரசியலைவிட்டே விலகுவதாக முதல்வர்கருணாநிதியின் மகனும் திமுக முக்கிய பிரமுகர்களில் ஒருவருமான மு.க.அழகிரிஅறிவித்தார்.

மு.க. அழகிரியின் இந்த அறிவிப்பால் மதுரை பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. மு.க.அழகிரிக்கு ஆதரவாக திமுக தொண்டர்கள் பலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

மதுரையில் திங்கள்கிழமை இரு இடங்களில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதாக 80திமுகவினர் கைது செய்யப்பட்டனர். மு.க. அழகிரி மீண்டும் அரசியலுக்குவரவேண்டும் என்று கோரி அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இது தவிர மதுரையில் 4 இடங்களில் திமுகவினர் உண்ணாவிரதம்மேற்கொண்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் பின்னர் விடுவிக்கப்பட்டதாகப்போலீஸார் தெரிவித்தனர்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+