மூப்பனாரால் மட்டுமே நல்ல ஆட்சி தர முடியும் என்கிறார் சிதம்பரம்
சென்னை:
மூப்பனார் ஒருவரால் மட்டுமே சிறந்த ஆட்சியை கொடுக்க முடியும் என்று முன்னாள்மத்திய அமைச்சரும், த.மா.கா. தலைவர்களில் ஒருவருமான ப.சிதம்பரம் கூறினார்.
மூப்பனாரின் 70-வது பிறந்தநாளையொட்டி சென்னையில் நடைபெற்றமேல்நிலைப்பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளுக்கான நாட்டியப் போட்டிக்கு அவர்தலைமை தாங்கிப் பேசியதாவது:
மூப்பனார் சிறந்த தலைவர்.தன்னலமற்றவர், தாயுள்ளம் கொண்டவர். அவரதுசிறப்புகள், பண்புகள் நமக்குத் தெரியும்.நாம் தான் அதை மக்களுக்கு எடுத்துச் சொல்லவேண்டும்.
தமிழகத்தில் நல்லதொரு ஆட்சி அமைய வேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள்.அதற்காக மற்ற ஆட்சிகள் எல்லாம் நல்ல ஆட்சி அல்ல என்று அர்த்தம் அல்ல.
நல்ல ஆட்சி என்பதை அறிக்கைகள் மூலம் முடிவு செய்யக் கூடாது. அந்த ஆட்சியில்செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்கள், சாதனைகளைக் கொண்டு மதிப்பிடவேண்டும்.
குழந்தைகளுக்குக் கல்வியும், மக்களுக்கு அடிப்படை வசதிகளும் செய்துகொடுத்தால்தான் அது நல்ல ஆட்சியாக இருக்கும்.
தமிழகத்தில் அடுத்த தமாகா ஆட்சி அமைய கட்சியினர் அனைவரும்பாடுபடவேண்டும் என்றார் சிதம்பரம்.












Click it and Unblock the Notifications