கிரிக்கெட் வீரர்களுக்கான புதிய நெறிமுறைகள்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்:

இந்திய கிரிக்கெட் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வாரிய அதிகாரிகளுக்கான புதிய நெறிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

அதன் விவரம்:

கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டு குற்றம் நிரூபிக்கப்படும் கிரிக்கெட் வீரர்களுக்கு கிரிக்கெட் விளையாட 5 ஆண்டு தடை அல்லது ஆயுள் தடைவிதிக்கப்படும்.

ரூ. 50 ஆயிரத்துக்கு அதிக மதிப்புள்ள பொருட்கள் பரிசாகவோ அல்லது அதே அளவு பணம் ரொக்கமாகவோ கிடைத்தால் அது பற்றி வாரியத்துக்கு15 நாட்களில் தகவல் தெரிவிக்க வேண்டும்.

கிரிக்கெட் வீரர்களும், அணி மேனேஜரும் மைதானத்துக்குள் தகவல் தொடர்புச் சாதனங்களைக் கொண்டு செல்லக்கூடாது.

போட்டி தொடர்பான தகவல்களை பத்திரிக்கைகளுக்கு கிரிக்கெட் வீரர்கள் சொல்லக்கூடாது. அது பற்றி எழுதவும் கூடாது.

அணி எடுக்கும் முடிவை யாரிடமும் கிரிக்கெட் வீரர்கள் கூறக்கூடாது.

கேப்டன், பயிற்சியாளர் நீங்கலாக மற்ற யாரும் பத்திரிக்கைகளுக்குப் பேட்டி அளிக்கக்கூடாது.

பரிசாகக் கிடைக்கும் வெளிநாட்டுப் பணத்தை கிரிக்கெட் வாரியத்திடம் டெபாசிட் செய்யவேண்டும். அதற்கு ஈடான இந்தியப் பணத்தை வாரியம்கொடுக்கும்.

தினசரி அலவன்ஸ் நீங்கலாக இதர பணம் முழுவதும் உடனடியாக வாரியத்தில் டெபாசிட் செய்யப்படும்.

கிரிக்கெட் வாரியத்துக்கு எதிராக எந்த செயலிலும் ஈடுபடும் வீரர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.வெளிநாட்டுச் சுற்றுப் பயணத்தின்போது கிரிக்கெட் வாரிய அனுமதி இல்லாமல் மனைவி தவிர மற்றவர்களை அழைத்துச் செல்லக்கூடாது.

கிரிக்கெட் வாரிய அனுமதி இன்று வேறு நபர்களை தங்கள் அறைக்கு வீரர்கள் அழைத்துச் செல்லக்கூடாது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+