தமிழக அரசுக்கு குமரி மாவட்ட எம்.எல்.ஏ. எச்சரிக்கை
சென்னை:
வேலை வாய்ப்பில் குமரி மாவட்ட மக்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டால் அரசுவிபரீத விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று குமரி மாவட்ட த.மா.கா. எம்.எல்.ஏ.குமாரதாஸ் எச்சரித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
கன்னியாகுமரி மாவட்டம் நூறு சதவீதம் கல்வி அறிவு பெற்ற மாவட்டம். கேரளமாநிலத்தோடு குமரி மாவட்டம் இருந்த பொழுது தமிழன் என்ற காரணத்தால் எல்லாத்துறைகளிலும் அன்று புறக்கணிக்கப்பட்டனர்.
இச் சூழலில் தமிழ்நாட்டோடு இணைந்தால் தமிழன் என்கிற பெருமையோடு எல்லாத்துறைகளிலும் உரிய மரியாதை கிடைக்கும் என்று எண்ணி மூதாதயர் பல உயிர்தியாகங்கள் செய்து தாய் தமிழகத்துடன் இணைந்தார்கள்.
இச்சூழலில் எல்லாத் துறையிலும் கல்வியறிவு, கடுமையான உழைப்பு காரணமாகதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் குமரி மாவட்ட மக்கள் பணி செய்து வருகிறார்கள்.
திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்பது தமிழன் பழமொழி. ஆனால் தமிழன்குறிப்பாக குமரி மாவட்டத்தைச் சேர்நதவன் பிற மாவட்டங்களில் தங்களுடையகல்வித்தகுதியின் அடிப்படையில் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் வேலை கேட்டுபதிவு செய்கிற நிலையைக் கூட காட்டுமிராண்டித்தனமாக தடுக்கிற அரசின்துர்செயலை குமரி மாவட்ட மக்கள் மக்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்.
குமரி மாவட்டத்தில் பிற மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் வேலைவாய்ப்புஅலுவலகத்தில் பதிவு செய்வதை அம்மாவட்டத்து மக்கள் இன் முகத்துடன்வரவேற்கிறார்கள்.
இவர்களுக்கு குமரி மாவட்டத்து மக்களால் எந்த வித இன்னல்களோ இடையூறுகளோகிடையாது. ஆனால் தமிழக அரசு குறுகிய மனப்பான்மையோடு குமரி மாவட்டத்தைபுறக்கணித்து, குமரி மாவட்டத்தில் ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள் 87-ம்ஆண்டிலிருந்து காத்திருக்கிறார்கள். அவர்கள் 35 வயதை கடக்கக்கூடிய நிலையில்உள்ளார்கள்.
வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்ய அனுமதிக்கவும் மாநில அளவில்பதிவு மூப்பு தொடர்ந்து குமரி மாவட்ட ம் புறக்கணிக்கப்படுமானால் குமரி மாவட்டமக்கள் மனதை புண்படுத்தினால், நாங்கள் கல்வி அறிவில் முன்னிலையில்இருப்பதற்கு அரசு தண்டனை தந்தால், பின் விளைவு பெரிதாக இருக்கும் என்பதைமுதல்வருக்கும், தமிழக அரசுக்கும் தெரிவிக்கிறேன் என்றார் குமாரதாஸ்.












Click it and Unblock the Notifications