நல்ல தகவல் சொல்வாரா கோபால்?
சென்னை:
நடிகர் ராஜ்குமார் கடத்தல் விவகாரத்தில் திங்கள்கிழமை இரவுக்குள் நல்ல தகவல் கிடைக்கும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.
இரண்டாவது முறையாகக் காட்டுக்குச் சென்றுள்ள நக்கீரன் கோபாலின் தகவலுக்காக இருமாநில அரசுகளும்காத்திருக்கின்றன.
நடிகர் ராஜ்குமார் மற்றும் அவரது உறவினர்களை மூன்றுபேரையும் வீரப்பன் கடத்தி திங்கள்கிழமையுடன் 23நாட்களாகி விட்டன.
வீரப்பனின் கோரிக்கைப்படி கர்நாடகாவில் 51 தடா கைதிகளை விடுவிக்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
தமிழகத்தில் பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 5 தீவிரவாதிகளை விடுவிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தங்கள் மீதான வழக்குகளை வாபஸ் பெற்றால்தான் விடுதலைக்கு சம்மதிப்போம் என்று தமிழ்த் தீவிரவாதிகள்உறுதியாகக் கூறிவிட்டனர்.
இதற்கிடையே இரண்டாவது முறையாக காட்டுக்குச் சென்றுள்ள அரசுத் தூதர் கோபாலிடமிருந்து இதுவரை எந்தத்தகவலும் வரவில்லை.
அநேகமாக திங்கள்கிழமை இரவுக்குள் கோபாலிடமிருந்து நல்ல தகவல் வரும் என்று அரசு வட்டாரங்கள்நம்பிக்கை தெரிவித்துள்ளன.












Click it and Unblock the Notifications