ராஜ்குமார் கடத்தல்: தமிழக-கர்நாடக அரசுகளுக்கு ராமதாஸ் பாராட்டு

Subscribe to Oneindia Tamil

நெல்லை:

சந்தனக் கடத்தல் வீரப்பனால் கடத்திச் செல்லப்பட்டுள்ள கன்னட நடிகர் ராஜ்குமாரைமீட்க தமிழக மற்றும் கர்நாடக அரசுகள் மேற்கொண்டுள்ள நடவடிக்கை திருப்திகரமாகஉள்ளது என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.

3 நாள் பயணமாக நெல்லை வந்த அவர் அங்கு நிருபர்களிடம் கூறியதாவது:

வீரப்பன் பிடியிலிருந்து ராஜ்குமாரை விடுவிக்க தமிழக-கர்நாடக அரசுகள் தீவிரமுயற்சிகளை மேற்கொண்டுள்ளன. அந்த முயற்சிகள் திருப்திகரமாகவே உள்ளன.

இப் பிரச்சினையில் மேலும் அவசரப்பட்டால் நிலைமை மோசமாகிவிடும். அதனால்,ராஜ்குமாரின் உயிருக்கு ஆபத்தும், கர்நாடகத் தமிழகர்களுக்குப் பாதிப்பும் ஏற்படும்அபாயும் உள்ளது.

ராஜ்குமாரை மீட்க வீரப்பன் கோரிக்கையை ஏற்று தமிழ்த் தீவிரவாதிகளைவிடுவிக்கவேண்டும் என்று நான் கோரவில்லை. ராஜ்குமாரை மீட்க தமிழக அரசுஎடுத்த முடிவு அது.

தீவிரவாதிகள் நிபந்தனை விதிப்பதும், அதை ஏற்று அரசு கீழ்படிவதும் ஒரு மோசமானமுன்னுதாரணமாக, வழிகாட்டியாக ஆகிவிடும். பிற்காலத்தில் சட்டத்தை ஒவ்வொரும்கையில் எடுத்துக் கொள்ளும் நிலைமை ஏற்படும்.

நாட்டில் தீவிரவாதம், வன்முறை, சாதிச் சண்டை ஆகியவற்றுக்கு கள்ளச்சாராயம்,வேலையில்லாத் திண்டாட்டம் போன்றவை காரணமாக அமைகின்றன. ஆகவே,அவற்றை ஒழிக்க வேண்டும் என்றார் ராமதாஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+