நாங்கள் தி.மு.க.வின் கலாசாரப் பிரிவு - ஆர்.எம் வீரப்பன்
சென்னை:
நாங்கள் திமுகவின் கலாசாரப் பிரிவு என்று எம்ஜிஆர் கழகத் தலைவர் ஆர்.எம்.வீரப்பன் தெரிவித்தார்.
சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆழ்வார்கள் ஆய்வு மையம் விருதுவழங்கு விழாவில் அவர் பேசியதாவது:
தமிழ் இலக்கியத்துக்கு சிறந்த எடுத்துக்காட்டாக இன்றைய கலைஞர்விளங்குகிறார்.அவருடைய கரத்தால் இந்த விருதுகளை வழங்குவது மிகவும்பொருத்தமான காரியம் ஆகும்
ஆண்டுதோறும் இந்த விருதுகள் வழங்குவதற்காக 5 லட்ச ரூபாய் வைப்பு நிதியாகஏற்படுத்தி அதைக் கொண்டு இந்த பணி நடந்து வருகிறது.
அதுவும்கூட 96-ல் தமிழினத் தலைவர் கலைஞர் முதல்வராக வந்தபிறகுதான் இந்தவிருதுகள் வழங்க நேரம் வந்தது. வாழையடி வாழையாக தமிழைவாழவைக்கிறவர்கள் இருக்கிறார்கள்.
அந்த வகையில் இசை மூலம் தமிழைப் பரப்பிய ஆழ்வார்கள் மீது நண்பர் ஜகத்ரட்சகன்ஆர்வம் கொண்டவர். அற்புத தமிழ் உணர்வு படைத்தவர்.எனவே அவரை நாட்டுக்குபயன்படுத்தும் பணியாக நான் இதை செய்து கொண்டிருக்கிறேன்.
இன்னும் ஒரு படி மேலே சொல்ல வேண்டும் என்றால் நாங்கள் அறிவிக்கப்படாததி.மு.க. கலாசார பிரிவு போல் செயல்பட்டுக்கொண்டு இருக்கிறோம் என்றார் ஆர்.எம்.வீரப்பன்.












Click it and Unblock the Notifications