நீர்மூழ்கிக் கப்பலுக்குள் இருந்த 118 பேரும் சாவு?

Subscribe to Oneindia Tamil

ஆஸ்லோ:

ஆர்க்டிக் கடலில் மூழ்கிய ரஷ்ய நீர்மூழ்கிக் கப்பல் முழுவதும் தண்ணீர் நிரம்பியுள்ளது.அதற்குள் இருந்த 118 ஊழியர்களும் இறந்திருப்பார்கள் என்று கருதப்படுகிறது.

ரஷ்ய கடற்படைக்குச் சொந்த குர்ஸ்க் என்ற நீர்மூழ்கிக் கப்பல் கடந்த ஆகஸ்ட் 14-ம்தேதி ஆர்க்டிக் கடல் பகுதியில் திடீரென்று மூழ்கத் தொடங்கியது. அதற்குள் 118 பேர்இருந்தனர்.

விபத்துக்குள்ளான நீர்மூழ்கிக் கப்பலுக்குள் இருப்பவர்களை மீட்கும் பணியில் ரஷ்யமீட்புப் படையினருடன் நார்வே நாட்டு மீட்புப் படையினரும் ஈடுபட்டுள்ளனர்.

திங்கள்கிழமை காலை கடலுக்குள் நீந்திச் சென்ற நார்வே நாட்டு மீட்புப் படையைச்சேர்ந்த நீர்மூழ்கி வீரர்கள் விபத்துக்குள்ளான கப்பலை அடைந்தனர். பின்னர் நீண்டநேர போராட்டத்துக்குப் பிறகு கப்பலின் மேல்புறக் கதவைத் திறந்து உள்ளே சென்றனர்.

ஆனால், அங்கு முழுவதும் தண்ணீர் நிரம்பியுள்ளது. அதனால், கப்பலுக்குள் இருந்த118 பேரும் இறந்திருப்பார்கள் என்று அஞ்சுவதாக மீட்புப் படையினர் தெரிவித்தனர்.யாரும் உயிர் பிழைத்திருப்பதற்கான வாய்ப்பு மிக மிகக் குறைவு என்றும் அவர்கள்தெரிவித்தனர்.

இதையடுத்து தங்களது மீட்புப் பணியை நார்வே நாட்டு மீட்புப் படையினர் நிறுத்திக்கொண்டுவிட்டனர். விரைவில் அவர்கள் தங்கள் நாட்டுக்குத் திரும்புவர் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.

இருப்பினும், சம்பவ இடத்தில் மீட்புப் பணிகளை தொடர்ந்து மேற்கொள்ளவுள்ளரஷ்யப் படையினருக்கு உதவியாக கேமராவைக் கொடுத்து உதவ அவர்கள் முடிவுசெய்துள்ளனர்.

அந்த கேமரா மூலம் கப்பலை முழுமையாகப் படம் பிடித்து அதற்கேற்ப, கப்பலுக்குள்இறந்துள்ளவர்களின் சடலங்களை மீட்கமுடியும். இது தவிர ரஷ்ய மீட்புப் படையினர்தங்களிடமுள்ள ரிமோட் கன்ட்ரோல் கேமராவைப் பயன்படுத்தவும்திட்டமிட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+